காதலிக்கும் நபருடன் இப்படிதான் இருக்கவேண்டும்…காதலர்களுக்கு டிப்ஸ் கொடுக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்…!!

rakul preet singh

நடிகை ரகுல் ப்ரீத் சிங் அடிக்கடி தனது மனதிற்கு தோன்றும் கருத்துக்களை வெளிப்படையாக பேசுவது உண்டு. அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம் காதல் குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்து காதல் குறித்தும் காதலர்களுக்கு சில டிப்ஸ்களும் கொடுத்துள்ளார்.

அந்த பேட்டியில் பேசிய ரகுல் ப்ரீத் சிங் ” காதல் என்பது அளவற்ற அன்பு கொன்ற ஒன்று. அதை நம்மளுடைய வார்த்தையால் நம்மால் விவரிக்க முடியாது. நீங்கள் காதலிக்கும் நபருடன் இருக்கும்போது, நீங்கள் நீங்களாகவே இருக்க வேண்டும். காதல் என்பது ஒருவருக்கொருவர் மதிப்பளிக்கக் கூடிய ஒன்று.

காதலிக்கும் இவர்கள் ஒரு நல்ல நண்பர்கள் போல இருக்கவேண்டும். அப்போது தான் அந்த காதல் நன்றாக இருக்கும். இருவரும் ஒருவருக்கொருவர் உதவி, இருவரின் கனவுகளையும் எட்ட வேண்டும். இருவருடைய மனமும் ஒத்து போகவேண்டும்” என காதல் குறித்த கேள்விக்கு குல் ப்ரீத் சிங் பதில் அளித்துள்ளார்.

மேலும், நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடிகரும், தயாரிப்பாளருமான ஜாக்கி பாக்னானியயை காதலிப்பதாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கடந்த 2021-ஆம் ஆண்டு அறிவித்து தனது காதலரை அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்