அரசியலுக்கு வந்தா இப்படித்தான்.. விஜய் மீதான விமர்சனத்தை துடைத்தெறிந்த ராதாரவி.!
சென்னை : நடிகர் ராதாரவி “கடைசி தோட்டா” படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், திமுகவிடம் சரண்டர் ஆகிவிட்டார் என்றெல்லாம் கூறுகின்றனர். அரசியலுக்கு ஒருவர் வந்துவிட்டால் இப்படித்தான் மாற்றி மாற்றி பேசுவார்கள் என்று விஜய்க்கு எதிராக எழுந்த நெகட்டிவ் விமர்சனத்திற்கு கருத்து தெரிவித்துள்ளார்.
மூத்த திரைப்பட நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராதாரவி நடித்துள்ள “கடைசி தோட்டா” படத்தை அறிமுக இயக்குனர் நவீன் குமார் எழுதி இயக்குகயுள்ளார். படத்தில் ராதா ரவி தவிர, கடைசி தோட்டாவில் வனிதா மற்றும் ஸ்ரீ குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்த படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், சென்னையில் இன்று படக்குழு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது. அப்பொழுது, பத்திரிகையாளர் முன்னிலையில் பேசிய, நடிகர் ராதாரவி படத்தில் நடித்தது பற்றியும், தான் அரசியலில் கற்று கொண்டதையும், சினிமாவில் கற்று கொண்டது குறித்தும் பேசினார்.
இதனிடையே, விஜய் அரசியல் வருகை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து ராதா ரவி, “நான் அரிசியலில் இருந்து வெளியே வரும் பொழுது, அவர் உள்ள வருகிறார். அரசியலில் எனக்கு 40 வருட அனுபவம் இருக்கு, விஜய் சாருக்கு வயது இருக்கு, எனக்கு அரசியலில் இருக்கின்ற நல்லது,கேட்டதை புரிந்து கொண்டேன்.
நான் ஒழுங்கா இருக்க மாட்டோம், நான் நல்லவன் கிடையாது, அதனால ஒதுங்கவிட்டேன். நான் வெளியே வாறேன் அவரு உள்ள வாராரு. விஜய் அரசியல் வருவது பெருமையா இருக்கு, விமர்சனங்களை தாண்டி விஜய் வளர வேண்டுமென” நடிகர் ராதா ரவி தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் பேசுகையில், “கல்வி விருது விழாவில் முதலில் விஜய் பேசிய போது, திமுகவினர் விஜய்க்கு எதிராக கருத்துகளை தெரிவித்ததாகவும், நீட் தேர்வு குறித்து பேசியதும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் கூறினார். மேலும், அரசியலுக்கு வந்து விட்டால் இப்படித்தான் மாற்றி மாற்றி பேசுவார்கள்” என்றார்.
நன்றி Thi Cinemas சேனல்…