இது தான் கோவை குசும்பு.! கட்டணம் கேட்ட டிவிட்டர் ஓனரை வம்பிழுத்த சிபி சத்யராஜ் .! வைரலாகும் அந்த கேள்வி.!
சினிமா பிரபலங்கள் அதிகம் உபயோகம் செய்யும் டிவிட்டரில் ‘ப்ளூ டிக்’ வாங்கி தங்களுக்கென அதிகாரப்பூர்வ கணக்குகளை வைத்துக்கொண்டு அதன்முலம் தங்களுடைய செய்திகளை பகிர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில்,ட்விட்டரின் புதிய நிறுவனரான எலான் மஸ்க் “ப்ளூ டிக்” எனும் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை வைத்திருப்பதற்கு மாதம் $8 (660) செலுத்த வேண்டும் என தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
இவருடைய இந்த திடீர் அறிவிப்பு சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி, ப்ளூ டிக் கணக்குகள் வைத்திருக்கும் அனைவருக்கும் சற்று அதிர்ச்சியை தந்தது. இந்த நிலையில், ட்விட்டரில் ‘ப்ளூ டிக்’ வேண்டுபவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற எலன் மஸ்கின் ட்வீட்க்கு, நடிகர் சிபி சத்யராஜ் கிண்டலாக ரிப்ளை செய்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது குறித்து சிபி சத்யராஜ் பதிவிட்டிருப்பது ” உங்களுடைய கூகுள் பே நம்பரை எனக்கு அனுப்புங்கள்” என ஜாலியாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் உங்களுக்கு நக்கல் ஓவர் எனவும் இதுதான் கோவை குசும்பு எனவும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
Pls send me your Gpay number. https://t.co/BXhd1aaCJF
— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) November 2, 2022