சென்னை 28க்கு அப்புறம் இது தான்! இளைஞர்களை கலங்க வைத்த நண்பன் ஒருவன் வந்த பிறகு!
நண்பன் ஒருவன் வந்த பிறகு : தமிழ் சினிமாவில் குறைவான பட்ஜெட்டில் நல்ல படங்கள் எடுக்கப்பட்டு வெளியாகும் படங்கள் வெளியானால் மக்கள் கொண்டாடுவது வழக்கம். அப்படி தான் தற்போது கல்லூரிகள் படிக்கும் மாணவர்கள், இளைஞர்கள், சினிமா ரசிகர்கள், குடும்ப ரசிகர்கள் என அனைவரும் ஒன்றாக நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தினை கொண்டாடி வருகிறார்கள்.
இந்த திரைப்படத்தினை அறிமுக இயக்குனர் ஆனந்த் ராம் என்பவர் இயக்கி முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் அவருடன் லீலா, குமரவேல், விஷாலினி, ஆனந்த், பவானி ஸ்ரீ, ஆர்ஜே விஜய், இர்ஃபான் தேவ், கேபி பாலா, மோனிகா, ஆர்ஜே ஆனந்தி, சபரிஷ், குகன், தர்மா, வினோத் பூவேந்தன், மதன் கௌரி, ஜெரோம் ரெமிகாஸ், பிரவீன், சாய் வெங்கடேஷ்
தங்கதுரை உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படத்தினை ஒயிட் ஃபெதர் ஸ்டுடியோவுடன் இணைந்து மசாலா பாப்கார்ன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் AH காஷிஃப் இசையமைத்துள்ளார். படத்தில் பல அறிமுக பிரபலங்கள் நடித்துள்ள காரணத்தால் படத்திற்கு ஒரு விளம்பரம் வேண்டும் என்பதற்காக இயக்குனர் வெங்கட் பிரபு படத்தினை வழங்கியுள்ளார்.
இந்த படம் கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் நட்பு கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட காரணத்தால் படம் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. 90ஸ் கிட்ஸ் அனைவரும் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி ஹிட்டான சென்னை 28 படத்தினை கொண்டாடியது போல இப்போது நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தினை கொண்டாடி வருகிறார்கள்.
படத்தில் இடம்பெற்றுள்ள பல காட்சிகள் நம்மளுடைய வாழ்க்கையில் நமது நண்பர்களுடன் இருக்கும்போது நடந்த விஷயங்கள் அனைத்தையும் நினைவுக்கு கொண்டு வருவதன் காரணமாக படம் பார்த்த இளைஞர்கள் எமோஷனலாக தனது விமர்சனங்களை கூறி வருகிறார்கள்.
படம் வெளியான சமயத்தில் பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாத நிலையில், தற்போது இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என அனைவரும் கொண்டாடி வருவதால் திரையரங்குகளுக்கு கூட்டம் கூட்டமாக இந்த படத்திற்கு சென்று வருகிறார்கள். படம் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதன் காரணமாக தமிழகத்தில் இந்த படத்திற்காக திரையரங்குகளில் எண்ணிக்கையும் அதிகப்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை மாற்று ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு கிடைத்த காரணத்தால் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.