இது ‘STR’ ஆட்டம்.! மேடையில் செம குத்தாட்டம் போட்ட சிம்பு.! வைரலாகும் வீடியோ.!
சிம்பு நடித்துள்ள பத்து தல திரைப்படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த இசை வெயிட்டு விழாவை நேரில் காண பல ரசிகர்கள் வருகை தந்திருந்தார்கள்.
இந்த விழாவில் சிம்பு லூசுப்பெண்ணே பாடலை மேடையில் பாடி நடனமாடியுள்ளார். அதற்கான வீடியோக்களும் இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் இந்த வீடியோ போதும் தலைவா கொஞ்ச நாள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருக்கும் என கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
எவ்ளோ நாள் ஆச்சுய்யா இப்படி குதூகலமா நீ ஆடி ???? pic.twitter.com/BY0eOwioHf
— ً (@ValuBoy) March 19, 2023
நிகழ்ச்சியில் பேசிய சிம்பு “இந்த விழாவிற்கு நான் வரும்போது ஒன்னு ஒன்னு தான் என்னுடைய மனதில் தோன்றியது. அது என்னவென்றால், நான் அழக்கூடாது என்று தான். எனக்கு தட்டிக்கொடுக்க என் ரசிகர்கள் மட்டும் தான் உள்ளனர். இனிமே நான் என்ன பண்ணுகிறேன் என்பதை ஏசியை போட்டுவிட்டு மட்டும் பாருங்கள். சாதாரணமாக வரவில்லை. வேறு மாதிரி வந்துள்ளேன். இனிமே உங்களை தலை குனிய விடமாட்டேன்” என பேசியுள்ளார்.
மேலும் பத்து தல திரைப்படத்தை கிருஷ்ணா இயக்கியுள்ளார். படத்தில் கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.