இவங்கதாங்க உண்மையான ஹீரோ! பிக்பாஸ் சேரன் வெளியிட்ட அட்டகாசமான வீடியோ!
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான சேரன், பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த சேரன், அடுத்ததாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.
இந்நிலையில், இவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், மலைப்பாம்பு ஒன்று நாயை சுற்றி கொண்டிருக்கும், அதனை சிறுவர்கள் சேர்ந்து காப்பாற்றி உள்ளனர்.
இந்த வீடியோவை வெளியிட்டு, ‘நிஜமான ஹீரோக்கள், நிஜமா இந்த சமூகத்தில் அடுத்த உயிரை பற்றி கவலைப்படுபவர்கள் அதை காப்பாற்ற முனைபவர்கள், தங்களின் வலிமை தெரிந்தவர்கள் இதுபோன்ற இளைஞர்களே. அவர்களைப் பற்றி பேசுங்கள் இவர்களைப்போன்றோரை இவ்வுலகில் முன்னிறுத்த முயலுங்கள். வாழ்க்கை ஒரு போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கனும்.’ என பதிவிட்டுள்ளார்.
நிஜமான ஹீரோக்கள், நிஜமா இந்த சமூகத்தில் அடுத்த உயிரை பற்றி கவலைப்படுபவர்கள் அதை காப்பாற்ற முனைபவர்கள், தங்களின் வலிமை தெரிந்தவர்கள் இதுபோன்ற இளைஞர்களே.
அவர்களைப்பற்றி பேசுங்கள் இவர்களைப்போன்றோரை இவ்வுலகில் முன்னிறுத்த முயலுங்கள். வாழ்க்கை ஒரு போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கனும். https://t.co/xZX2XVLx4o— Cheran (@directorcheran) September 27, 2019