Categories: சினிமா

அட நம்ம சாக்லேட் பாயை கூட விட்டு வைக்கலையா? பிக் பாஸ் வீட்டில் காத்திருக்கும் ஆச்சரியம்!

Published by
கெளதம்

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 தொடங்க இருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பிக் பாஸ் சீசன் 7 அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து விஜய் தொலைக்காட்சி நிறுவனம் அடிக்கடி புதிரான ப்ரோமோக்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 அக்டோபர் 1, 2023 அன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு  தொடங்கும். இதற்கிடையில், இந்த சீசனில் இரண்டு வீடுகள் இருக்கும் என்ற தகவல் ரசிகர்களை மேலும் ஆச்சரியமடைய செய்துள்ளது. இந்நிலையில், நாளை மறுநாள் மாலை இந்த பிக் பாஸ் வீட்டில் யாரெல்லாம் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற பட்டியலுடன் இந்த நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ளது.

இந்த நேரத்தில், இதில் யாரெல்லாம் பங்கேற்கிறார்கள் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி வருகிறது. அவ்வப்போது வெளியாகும் அந்த தகவல் உண்மை இல்லை என்றாலும் சில நம்பத்தக்க தகவல்களும் உலா வந்தவண்ணம் இருக்கிறது. அப்படி, அந்த தகவல்களில் தற்போது  2K கிட்ஸ் சாக்லேட் பாயாக வலம்வந்த நடிகர் அப்பாஸ் பிக் பாஸ் சீசன் 7 லிஸ்டில் இணைந்துள்ளார்.

அதாவது, வெளிநாட்டில் இருக்கும் நடிகர் அப்பாஸ் சமீபத்தில் சென்னை வந்திருந்தார், அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்த வீடியோக்களும் வைரலானது. இதனை தொடர்ந்து, இவர் பிக் பாஸ் நிகழ்வில் கலந்து கொள்வார் என்று கிசுகிசுக்க தொடங்கியது. ஆனால், முக்கிய பணிக்காக சென்னைக்கு வந்த அவர் இப்பொது வெளிநாடு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால், அவரால் இதில் கலந்து கொள்ள முடியாது என்று தெரிகிறது. அதுவும், எலியும் புனையும் அடித்துக்கொள்ளும் பிக் பாஸ் வீட்டில் ஒரு நாள் கூட நம்ம அப்பாவி அப்பாஸ் தாங்க மாட்டார் என்றும், திரையில் சாக்லேட் பாயாக தோன்றிய அப்பாஸ் பிக் பாஸ் வீட்டில் ரகர்டு-ஆக மாறிவிடுவாரா என்ன? என்றெல்லாம் யோசிக்க வைக்கிறது.

காதல் தேசம் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான நடிகர் அப்பாஸுக்கு, ‘மின்னலே’, படத்தில் ராஜீவ் சாமுவேல் என்ற கதாபாத்திரம் புகழை தேடி தந்தது. படத்தில் சாக்லேட் ஹீரோ போல் தோன்றிய அவரது அவதாரம் கதாபாத்திரம் இன்னும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

பின்னர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆனந்தம், மானஸ்தன்  மற்றும் பல படங்களில்  நடித்து பிரபலமானார். மேலும் அவர் தமிழை தொடர்ந்து, மலையாளம் கன்னடம், ஹிந்தி மற்றும் தெலுங்கு  திரைப்படத் துறைகளிலும் நடிக்க தொடங்கினார்.

Published by
கெளதம்

Recent Posts

என்னை மிஞ்சுவாருனு நினைச்சேன்..ஆனா…அஸ்வின் ஓய்வால் அதிர்ச்சியான அனில் கும்ப்ளே!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…

50 minutes ago

அம்பேத்கரை இழிவுபடுத்திய கட்சி காங்கிரஸ்! மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில்  அம்பேத்கர்  பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…

2 hours ago

நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…

2 hours ago

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

11 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

13 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

14 hours ago