கமல்ஹாசன் ஏமாற்றிவிட்டார்! தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்த திருப்பதி பிரதர்ஸ்!

Published by
பால முருகன்

Kamal Haasan : உத்தமவில்லன் பட விவகாரத்தில் கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் புகார் அளித்துள்ளது.

ரமேஷ் அரவிந்த் என்பவர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் உத்தமவில்லன். இந்த திரைப்படத்தை இயக்குனர் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனம் திருப்பதி பிரதர்ஸ் தான் தயாரித்து இருந்தது. இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தது.

வசூல் ரீதியாக படம் பெரிய தோல்வியை சந்தித்த காரணத்தால் படத்தை தயாரித்த திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு பெரிய நஷ்ட்டம் ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட திருப்பதி பிரதர்ஸ் தரப்பில் இருந்து உத்தம வில்லன்” எங்கள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பொருளாதார நஷ்டத்தையும், நிதி நெருக்கடியையும், ஏற்படுத்திய படம் நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக கமல்ஹாசன்  எங்கள் நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு படம் நடித்து தயாரித்து தருவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்துள்ளனர்” என்று கூறியிருந்தது.

இந்த நிலையில், உத்தமவில்லன் பட விவகாரத்தில் கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் புகார் அளித்துள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு திருப்பதி பிரதர்ஸ் ஒரு தமிழ் திரைப்படம் தயாரிப்பதற்காக பேசினார்களாம். அப்போது கூறப்பட்ட கதை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு மிகவும் பிடித்திருந்த காரணத்தால் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் திருப்பதி பிரதர்ஸுக்கு முதல் காப்பி அடிப்படையில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் படத்தை செய்து தருவதாக ஒப்புக்கொள்ளப்பட்டதாம்.

உத்தமவில்லன் படம் வெளிநாட்டு உரிமை ரூ. 10 கோடிக்கும் மற்றும் வட இந்தியா உரிமை ரூ.5 கோடிக்கும் கமல்ஹாசன் எடுத்துக் கொண்டதால் மீதமுள்ள ரூ.35 கோடிக்கு (வெளிநாடு மற்றும் வட இந்தியா உரிமை இல்லாமல்) ஒப்பந்தம் இருவரிடையே கையெழுத்தானது. ஒப்பந்தம் கையொப்பமான அன்றே ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு முன்பணமாக ரூ.15கோடி கொடுக்கப்பட்டதாம்.

பிறகு அந்த கால கட்டத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த மலையாள படமான ‘திரிஷ்யம்” படத்தினை வெளியான மூன்றாவது நாளில் கமல்ஹாசனிடம்  திரையிட்டு காண்பித்து அந்த படத்தை நடித்து, தயாரித்து தருமாறு கேட்டுக்கொண்டார்களாம். ஆனால் ,அந்த கதையை கமல்ஹாசன் பிடிக்கவில்லை என்று கூறிவிட்டு வேறொரு கதை சொல்கிறேன் என்று கூறினாராம். ஆனால், கமல்ஹாசன் சொன்ன அந்த கதை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு  பிடிக்கவில்லையாம்.

திரிஷ்யம் கதை பிடிக்கவில்லை என்று திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திடம் கூறிவிட்டு கமல்ஹாசன் வேறொரு தயாரிப்பு நிறுவனத்திடம் பேசி ஒப்புக்கொண்டாராம். இந்த தகவல் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு தெரிய வர உடனடியாக கமல்ஹாசனை தொடர்பு கொண்டு என்ன எப்படி செய்துவீட்டிற்கள் என்று கேட்டார்களாம். அதற்கு கமல்ஹாசன் நான் உங்களுக்கு வேறு கதையை சொல்கிறேன் என்று சமாளித்துவிட்டாராம்.

பிறகு திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் நீங்கள் முதலில் சொன்ன கதையை படமாக நடித்து கொடுங்கள் என்று கமல்ஹாசனிடம் கேட்டதாம். அப்படி தான் உத்தம வில்லன் படம் உருவானதாம். படம் நஷ்டம் கொடுத்த நிலையில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு கமல்ஹாசன் ஒரு படத்தில் நடித்து கொடுக்கிறேன் என்று கூறினாராம்.

இதனையடுத்து, 2 முறை கமல்ஹாசனை நேரிலும் மற்றும் தொலைபேசியிலும் தொடர்பு கொண்டோம் எனவும்,  ஒன்பது வருடங்கள் கழிந்தும் இதுவரை எங்களுக்கு படம் செய்து தருவதாக கூறியவர் செய்து தரவில்லை என்றும் இப்பட வெளியீட்டிற்கு கடன் கொடுத்த அனைவரும் எங்களுக்கு மிகவும் நெருக்கடி கொடுத்து கொண்டிருக்கிறார்கள். நமது சங்கம் தலையிட்டு கமல்ஹாசன் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவர்கள் அளித்த உத்திரவாத கடிதத்தின்படி எங்களுக்கு விருப்பமான கதையில் நடித்து தயாரித்து தருவதற்கு கால்ஷீட் பெற்று தரும் படி பணிவுடன் கேட்டுகொள்கிறோம்” என திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் புகார் அளித்துள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

8 hours ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

8 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

9 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

10 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

13 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

13 hours ago