அலைகள் ஓய்வதில்லை படத்தால் நொந்துபோன தியாகராஜன்! மனுஷன் ரொம்ப பாவம் தான்!

alaigal oivathillai thiyagarajan

Thiagarajan இயக்குனரும், நடிகருமான தியாகராஜன் இதுவரை பல படங்களை இயக்கவும் செய்து இருக்கிறார். இவர் தமிழ் சினிமாவில் அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தான் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்தது என்றே கூறலாம். அந்த அளவிற்கு இந்த படத்தில் ஒரு வில்லத்தனமான நடிப்பை தியாகராஜன்  வெளிப்படுத்தி இருந்தார்.

read more- கமல்ஹாசனை பார்த்தாலே நடுங்கும் பிரபல நடிகை! அப்படி என்ன செஞ்சிட்டாரு உலகநாயகன்?

இந்த படம் வெளியான சமயத்தில் இவருக்கு அடுத்ததாக பட வாய்ப்புகள் வந்தாலும் அவர் மீது அதிகமான எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்தது என்றே சொல்லவேண்டும். அதற்கு காரணமே அவர் அலைகள் ஓய்வதில்லை படத்தில் ஒரு முரட்டு தனமான கதாபாத்திரத்தில் நடித்தது தான். இந்த படம் வெளியான சமயத்தில் தியாகராஜன் மனைவி மகனை கூப்பிட கணவருடன் பள்ளிக்கூடம் சென்றாராம்.

read more- விஜயகாந்தை கோபப்படுத்திய ரவுடிகள்! படப்பிடிப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்?

அந்த சமயம் தியாகராஜனை அங்கு  இருந்த அனைவரும் வித்தியாசமாக பார்த்தார்களாம். அடுத்த நாள் தியாகராஜன் மனைவியை தனியாக அழைத்து இவர் உங்களுடைய கணவரா? இவருடன் எப்படி வாழ்கிறீர்கள் என்பது போல கேட்டார்களாம். அலைகள் ஓய்வதில்லை படத்தில் அப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்த காரணத்தால் தான் அவரிடம் அப்படி கேட்டார்களாம்.

READ MORE – அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா! செம தில்லு தான் மேடம் உங்களுக்கு!

இப்படியான விஷயங்களை கேள்விப்பட்டவுடன் தியாகராஜன் சற்று நொந்துபோய்விட்டாராம். என்ன இது நமக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நினைத்தோமே இப்படி ஆகிவிட்டதே என யோசித்தாராம். பிறகு தான் எல்லாத்தையும் மாற்றவேண்டும் என்றால் நாம் நல்ல கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிக்கவேண்டும் என்று முடிவெடுத்து மலையூர் மம்பட்டியான் படத்தில் ஹீரோவாக நடித்தாராம்.

read more- தூங்கட்டும் எழுப்பாதீங்க! கறிசோறு போட்டு கேப்டன் விஜயகாந்த் செய்த செயல்?

அந்த படத்தில் ஹீரோவாக நடித்த பிறகு தான் தியாகராஜனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாம். அதன்பிறகு அப்படியே படங்களில் ஹீரோவாக நடித்தும் படங்களை இயக்கியும் முன்னணி பிரபலமாக வளர்ந்தார். படங்களில் நடித்தது மட்டுமின்றி பூவுக்குள் பூகம்பம், சேலம் விஷ்ணு, ஆணழகன், மம்பட்டியான் உள்ளிட்ட பல படங்களை இயக்கவும் செய்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்