இர்பான்கான், ரிஷிகபூர் ஆகிய இருவரும் மக்களுக்காக தங்களை அர்ப்பணித்தவர்கள்.
இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதனால், மக்கள் தங்களது முக்கியமான தேவைகளுக்கு கூட வெளியில் செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, திரையுலக பிரபலங்களான ரிஷி காபூர் மற்றும் இப்ரான் கான் ஆகியோர் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளனர். இவர்களது மரணம் திரையுலகினர் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்திய நிலையில், இவர்களது இறுதி சடங்கிற்கு யாராலும் செல்ல இயலாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், இவர்களது மரணம் குறித்து இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் கூறுகையில், ‘இர்பான்கான், ரிஷிகபூர் ஆகிய இருவரும் மக்களுக்காக தங்களை அர்ப்பணித்தவர்கள். ஆனால் இறுதிச் சடங்குக்கு யாரும் செல்லக் கூட முடியாத இந்த நிலையில் அவர்கள் மரணம் என்பது துரதிர்ஷ்டவசமானது. இது ரமலான் புனித மாதம். ஒருவகையில் அவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளனர்.’ என தெரிவித்துள்ளார்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…