எனக்கு கிடைக்காத வாய்ப்பு அவுங்களுக்கு கிடைச்சிருக்கு! நடிகை சனம் ஷெட்டி வேதனை!
பிக் பாஸ் மூலம் பிரபலமான நடிகை சனம் ஷெட்டி தற்போது வேதனையுடன் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. நடிகை சனம் ஷெட்டிக்கு வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 68 திரைப்படத்தில் தனக்கு கிடைக்காத வாய்ப்பு வேறொரு நடிகைக்கு சென்றுவிட்டதாக வருத்தத்துடன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அந்த நடிகை வேறு யாரும் இல்லை இச்சட வாகனமுலு நீலப்பரடு, குண்டூர் காரம், பெயரிடப்படாத விஸ்வக் சென் படம் உள்ளிட்ட பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்த நடிகை மீனாட்சி சவுத்ரி தான். இவர் தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கொலை திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், இவர் விஜய் நடிக்கவுள்ள தளபதி 68 படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்கான பூஜை நடைபெற்றுள்ள நிலையில், அந்த பூஜையில் மீனாட்சி சவுத்ரி கலந்துகொண்டுள்ளார். அது மட்டுமின்றி நடிகை சனம் ஷெட்டியுமே மீனாட்சி சவுத்ரி தளபதி 68 படத்தில் நடிப்பதை உறுதி செய்துவிட்டார்.
சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் மீனாட்சி சவுத்ரி பற்றி சனம் ஷெட்டியிடம் கேள்வி கேட்க நமக்கு கிடைக்காதது..அவங்களுக்கு கடை போகுது 68 என சூசகமாக பதிவிட்டுள்ளார். இதன் மூலம் மீனாட்சி சவுத்ரி விஜயின் 68-வது படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. இருப்பினும் விஜயின் தீவிர ரசிகையாக இருக்கும் சனம் ஷெட்டி தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என வருத்தத்தில் இருக்கிறார்.
எனவே, ஒரு முறையாவது அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கவேண்டும் என ரசிகர்கள் சனம் ஷெட்டிக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். மேலும், தளபதி 68 திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 3 -ஆம் தேதி முதல் தொடங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.