நான் குனியும் போது வீடியோ எடுத்து போடுறாங்க…நடிகை நீலிமா வேதனை.!!
சீரியல்களில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான நடிகை நீலிமா தற்போது சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார். குறிப்பாக சமீபத்தில் கூட ராகவலாரன்ஸ் நடிப்பில் வெளியான ருத்ரன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சில படங்களில் நடித்தும், சில படங்களில் நடிக்க கமிட்டும் ஆகி வருகிறார். இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நீலிமா ” நான் குனியும் போது வீடியோ எடுத்து போடுறாங்க” என வேதனையுடன் பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” நான் நிறைய க்ளீவேஜ் ஷோவ் பண்ணது கிடையாது…சீரியல்களில் நடித்து கொண்டிருந்ததால் நான் கவர்ச்சியாக உடை அணிந்து நடித்தது கிடையாது. சீரியல்களில் நடிப்பதை தாண்டி நாம் வீடியோ…அதாவது யூடியூபில் சும்மாக வீடியோ போடும் போது அதில் குனிந்து எதாவது பொருட்களை எடுப்போம்.
அப்படி குனியும் போது அதனை வீடியோவாக எடுத்து “நீலிமா க்ளீவேஜ்” என அந்த வீடியோவை இணையதளங்களில் போடுகிறார்கள். எனவே, நான் ஒரு நாள் கூட க்ளீவேஜ்-காக போட்டோஷூட் பண்ணாதே இல்லை. எனக்கு அதில் விருப்பமும் இல்லை” என கூறியுள்ளார்.