உலகநாயகன் கமலஹாசன் வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 12 பிரபலங்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில் மீராமீதுன் இந்நிகழ்ச்சியில் இருந்து நான்காவது நபராக எலிமினேட் செய்யப்பட்டார். வெளியில் வந்த மீராமீதுன் கூறியுள்ளதாவது, சேரன் என்னை தவறாக தொட்டார் எனக் கூறவில்லை. அவர் அப்படி நடந்து கொண்டது வன்முறையாக தான் இருந்தது என்றும், அவர் தன்னிடம் கோபமாகவே இருந்ததாகவும், அவருடைய இந்த கோபம் தான் வன்முறையாக மாறியுள்ளது என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், பிக்பாஸில் சாந்தி தான் வெற்றி பெற வேண்டும் என்றும், சாக்ஷி, அபிராமி, ஷெரின் ஆகியோர் வெற்றி பெற கூடாது என்றும் கூறியுள்ளார். மேலும், அவர் இனிமேல் மாடலிங் மற்றும் சினிமாவில் நேரத்தை செலவிடப்போவதாக கூறியுள்ளார்.
சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டி இன்று மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டி இன்று மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
கர்நாடகா : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 1-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக…
நோர்வேயில் : நார்வே செஸ் போட்டியில் இந்தியாவின் உலக சாம்பியன் டி. குகேஷ் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து…
மக்கா : விமானத்தைத் தவறவிட்ட நபரை மீண்டும் விமானமே அழைத்து சென்ற அதிசிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. லிபியாவைச் சேர்ந்த அமீர்…
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஏற்கனவே பேசுபொருளாக இருந்த நிலையில், அதனை இன்னும் பெரிய அளவில்…