பிக்பாஸ் தமிழ் சீசன் 7 தற்போது 50 நாட்களை கடந்துள்ளது. இந்நிலையில் இந்த வாரம் நடந்த பூகம்ப டாஸ்க்கில் தோல்வியடைந்த ஹவுஸ்மேட்ஸ் வெளியேற, பழைய போட்டியளார்கள் வீட்டிற்குள் மீண்டும் புதிய போட்டியாளர்களாக களமிறங்க உள்ளனர்.
இந்த முறை இரண்டு பேர் வெளியேற செய்ய முடிவு செய்துள்ளதால், முன்னர் வெளியேற்றப்பட்ட மூன்று போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக மீண்டும் வீட்டுக்குள் வரவுள்ளதாக சொல்லப்படுகிறது.
ஏற்கனவே, ஒரே வாரத்தில் 5 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் வீட்டுக்குள் நுழைந்தன. அதில், அன்ன பாரதி சென்ற ஒரே வாரத்திலேயே வெளியில் சென்று விட்டார். இதனை தொடர்ந்து, கடந்த வாரம் கானா பாலாவும் வெளியேறி விட்டார். அந்த வகையில், இந்த வாரம் இரண்டாவது டபுள் எவிக்ஷன் நடைபெற இருக்கிறது.
இந்த வாரம் புல்லி கும்பலைச் சேர்ந்த இரண்டு போட்டியாளர்கள் வெளியே செல்வதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றனர். இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்டில் ரவீனா, விசித்ரா, அக்ஷயா, மணி, அர்ச்சனா, மாயா, பூர்ணிமா மற்றும் பிராவோ ஆகிய 8 போட்டியாளர்கள் உள்ளனர்.
இதில் மாயா, பூர்ணிமா பிராவோ மற்றும் அக்ஷயா ஆகியோர் மிகக் குறைந்த வாக்குகளுடன் டேஞ்சர் சோனில் உள்ளதாக கூறப்படுகிறது. ஒரு சிலர் அக்ஷயா மற்றும் பூர்ணிமா வெளியேற்றப்படுவார்கள் என்று கூற, அக்ஷயாவும் பிராவோவும் நடையை கட்ட உள்ளதாக இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் அந்த போட்டியாளர்!
இப்படி இருவர் வெளியேற, மூன்று போட்டியாளர்கள் வீட்டுக்குள் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுக்கவுள்ளனர். விஜய் வர்மா, அனன்யா ராவ், வினுஷா ஆகியோர் வைல்டு கார்டுகளாக மீண்டும் வீட்டிற்குள் நுழையும் வீரர்களாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.சரி எது என்னவோ… இந்த வாரம் இவர்கள் இருவரும் வெளியேற்றப்படுவார்களா என்பதை நாளைய எபிசோட் வரை காத்திருக்க வேண்டும்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…