“சிரிப்புக்கு பஞ்சமே இருக்காது” மத கஜ ராஜா குறித்து விஷால்!

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள மத கஜ ராஜா 12 வருடங்கள் கழித்து இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Madha Gaja Raja

சென்னை : பொங்கல் போட்டியில் இருந்து விடாமுயற்சி படம் வெளியேறியதில் இருந்து அடுத்ததாக பொங்கல் ரிலீஸ்க்கு நிறைய படங்கள் போட்டிக்கு வந்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக, நேசிப்பாயா, TenHours, உள்ளிட்ட படங்கள் வெளியாகவுள்ளது. அந்த வரிசையில் 90ஸ் கிட்ஸ் அதிகமாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த விஷாலின் மத கஜ ராஜா படமும் வெளியாகவுள்ளதாக திடீரென அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த 2013-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவிருந்த இந்த திரைப்படம் சில காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. படம் சுந்தர் சி படம் என்பதாலும், படத்தில் விஷால், சந்தானம் ஆகியோர் நடித்திருக்கும் காரணத்தால் நிச்சயமாக காமெடிக்கு பஞ்சமே இருக்காது என படத்தின் மீது ஆரம்பத்தில் இருந்தே எதிர்பார்ப்புகள் இருந்தது.

அது மட்டுமின்றி படத்தில் இருந்து வெளியான பாடல்களும் பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக சிக்கு புக்கு ரயில் வண்டி பாடல் பலருடைய கவனத்தை ஈர்த்தது. அதைப்போல, அந்த சமயம் ட்ரைலும் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ரிலீஸ் ஆகாமல் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த சூழலில். பொங்கல் பண்டிகை தான் இந்த படத்தை கொண்டாட சரியான நேரம் என முடிவெடுத்து படத்தை இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 12-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படம் வெளியாவது குறித்து விஷால் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ” 12 வருடங்கள் கழித்து, எனக்கு பிடித்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் வெளியாகிறது மகிழ்ச்சியாக உள்ளது. ரசிகர்களை மகிழ்விக்க படம் பொங்கல் பண்டிகைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கண்டிப்பாக சிரிப்புக்கு இந்த படத்தில் பஞ்சமே இருக்காது” எனவும் விஷால் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்