“இந்த படத்துலே எதுவுமே இல்ல”: வாழை பட விழாவில் மிஷ்கின் சர்ச்சை பேச்சு.!
சென்னை : வாழை படம் ஒரு படமாகவே இருக்காது எனப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட மிஷ்கின் தெரிவித்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வாழை படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது. இந்த விழாவில் பா.ரஞ்சித், கவின், மிஷ்கின், ராம், நெல்சன் எனப் பல பிரபலங்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்கள். அப்போது, வழக்கம் போல் சர்ச்சைகளைக் கிளப்பும் வகையில் பேசும் மிஷ்கின் இந்த படத்தின் விழாவிலும் சர்ச்சையைக் கிளப்பினார்.
மேடையில் படம் பற்றி அவர் பேசும் போது ” வாழை படத்தினை பார்த்த பிறகு ஒரு படம் மாதிரியே இருக்காது. படத்தில் எதுவுமே இருக்காது போல இருக்கும்” என்றார். அவர் இது போலப் பேசியவுடன் விழாவிலிருந்த அனைவரும் அமைதியாக இருந்து பேசுவதைக் கவனித்தனர். பின் பேசத் தொடங்கிய மிஷ்கின் “வாழை நமக்குப் படம் மாதிரி இருக்காது ஒரு பாடமாக இருக்கும்” என்றார். இப்படி பேசியவுடன் தான் அங்கிருந்தவர்கள் கைகளைத் தட்டினார்கள்.
அதன் பிறகு பேசிய மிஷ்கின் ” தமிழ்நாட்டை உணர வேண்டும் என்றால் ‘வாழை’ படத்தைக் கண்டிப்பாகப் பாருங்கள். 6 வயதுக் குழந்தையிடமும், 8 வயதுக் குழந்தையிடமும் தான் உண்மை இருக்கும். அதனை மாரி செல்வராஜ் அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார்” எனவும் மிஷ்கின் பேசினார்.
அதனை தொடர்ந்து கொட்டுக்காளி படத்தின் விழாவில் பேசியது ட்ரோல் ஆனது பற்றியும் மிஷ்கின் பேசினார். கொட்டுக்காளி படத்தின் விழாவில் மிஷ்கின் பேசும்போது ” படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது என்னுடைய பொறுப்பு எனவே அதற்காக நான் நிர்வாணமாக கூட ஆட தயாராக இருக்கிறேன்” என பேசி இருந்தார். அவர் பேசியது சமூக வலைத்தளங்களில் மிகவும் ட்ரோல் ஆனது.
இந்நிலையில், அந்த ட்ரோல் சம்பவங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக வாழை பட விழாவில் பேசிய மிஷ்கின் ” கொட்டுக்காளி’ பட விழாவில் பேசியதை பலரும் கிண்டல் செய்தார்கள். ஆனால், இந்த முறை மேடையில் நான் நாகரிகமாகவே பேசியிருக்கிறேன். நான் சரக்கு அடித்துவிட்டு பேசுவதாக சில சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.சரக்கு அடிப்பதை விட்டு இப்போது முழுவதுமாக உடற்பயிற்சி செய்து கொண்டு இருக்கிறேன்.
விரைவில் சிக்ஸ் பேக்ஸ் வைத்த முதல் இயக்குனராக நான் மாறுவேன். இந்த முறை யாருக்கும் என்னால் கண்டெண்ட் கொடுக்கமுடியவில்லை என்பதற்காக நான் ரொம்பவே சந்தோஷமாகவும், வருத்தமாகவும் இந்த மேடையை விட்டு இறங்குகிறேன். ” எனவும் பேசினார். இவர் பேசியதை பார்த்த நெட்டிசன்கள் மேடை நாகரிகம் தெரியாமல் தொடர்ச்சியாக மிஷ்கின் இப்படி பேசுகிறார் எனவும், மேலும் சிலர் இவருக்கு இதே வேலை தான் எனவும் ட்ரோல் செய்து வருகிறார்கள்.
அதனைத் தொடர்ந்து கொட்டுக்காளி படத்தின் விழாவில் பேசியது ட்ரோல் ஆனது பற்றியும் மிஷ்கின் பேசினார். கொட்டுக்காளி படத்தின் விழாவில் மிஷ்கின் பேசும்போது ” படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது என்னுடைய பொறுப்பு எனவே அதற்காக நான் நிர்வாணமாகக் கூட ஆட தயாராக இருக்கிறேன்” எனப் பேசி இருந்தார். அவர் பேசியது சமூக வலைத்தளங்களில் மிகவும் ட்ரோல் ஆனது.
இந்நிலையில், அந்த ட்ரோல் சம்பவங்களுக்குப் பதில் அளிக்கும் விதமாக வாழை பட விழாவில் பேசிய மிஷ்கின் ” கொட்டுக்காளி’ பட விழாவில் பேசியதைப் பலரும் கிண்டல் செய்தார்கள். ஆனால், இந்த முறை மேடையில் நான் நாகரிகமாகவே பேசியிருக்கிறேன். நான் சரக்கு அடித்துவிட்டுப் பேசுவதாக சில சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.சரக்கு அடிப்பதை விட்டு இப்போது முழுவதுமாக உடற்பயிற்சி செய்து கொண்டு இருக்கிறேன்.
விரைவில் சிக்ஸ் பேக்ஸ் வைத்த முதல் இயக்குனராக நான் மாறுவேன். இந்த முறை யாருக்கும் என்னால் கண்டெண்ட் கொடுக்கமுடியவில்லை என்பதற்காக நான் ரொம்பவே சந்தோஷமாகவும், வருத்தமாகவும் இந்த மேடையை விட்டு இறங்குகிறேன். ” எனவும் பேசினார். இவர் பேசியதைப் பார்த்த நெட்டிசன்கள் மேடை நாகரிகம் தெரியாமல் தொடர்ச்சியாக மிஷ்கின் இப்படிப் பேசுகிறார் எனவும், மேலும் சிலர் இவருக்கு இதே வேலை தான் எனவும் ட்ரோல் செய்து வருகிறார்கள்.