உங்களை போல ஒரு சூப்பர் ஸ்டார் இல்ல…2 மணிக்கு ரசிகரை சந்தித்த ஷாருக்கான்.! நெகிழ்ச்சி பதிவு.!
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தனது தீவிர ரசிகரின் ஆசையை நிறைவேற்றி, அவரை ஹோட்டலில் அதிகாலை 2 மணியளவில் சந்தித்தார். ரசிகர்கருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் ஷாருக்கானுக்கு ரசிகர் முத்தம் கொடுப்பதை காணலாம்.
ஷாருக்கானை சந்தித்த அந்த ரசிகர் புகைப்படங்களை தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்து “ஏங்களுக்காக உங்கள் நேரத்தை ஒதுக்கியதற்கு ரொம்ப நன்றி சார். 2 மணிக்கு உங்களைப் போல் வேறு எந்த சூப்பர்ஸ்டாரும் தங்கள் ரசிகர்களுக்காக இதைச் செய்யவில்லை, எங்களை உங்கள் ஹோட்டல் அறைக்குள் அழைத்தனர்.
இதையும் படியுங்களேன்- ராபர்ட் ரொம்ப பெரியவர்…காதல் கிசு கிசு குறித்து மனம் திறந்த ரச்சிதா.!
Thank you @iamsrk For Taking Your Time out for us, 2:00 AM
No other superstar did this for their fans like you do, calling us inside your Hotel Room & giving Us Full Time, attention & respect.
Thank you for your blessings.I am sorry to disturb you at late night, But I Love u. pic.twitter.com/q6Qbxa1geO
— Jatin Gupta (@iamjatin555) January 11, 2023
எங்களுக்கு முழு நேரமும், கவனமும், மரியாதையும் தருகிறோம். உங்கள் ஆசீர்வாதங்களுக்கு நன்றி. தாமதமாக இரவில் உங்களை தொந்தரவு செய்ததற்கு வருந்துகிறேன், ஆனால் உங்களை எனக்கு ரொம்பவே பிடிக்கும்” என பதிவிட்டுள்ளார்.
மேலும் நடிகர் ஷாருக்கான் தற்போது பதான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.