சினிமா படப்பிடிப்புக்கு அவசரமில்லை – நடிகர் கமலஹாசன்
தற்போதைக்கு சினிமா வேண்டாம் என்றிருப்பது பெரிய தவறாகிவிடாது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 2 மாத காலமாக சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், பிரபல நடிகருமான கமலஹாசன், நாமே தீர்வு என்ற திட்டத்தை தொடங்கி வைத்து, ஜூம் ஆப் மூலம் பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த இவர், ‘சினிமா என்பது பள்ளி, மருத்துவமனை, போக்குவரத்து போன்ற அத்தியாவசிய சேவை மையங்கள் அல்ல. எனவே, தற்போதைக்கு சினிமா வேண்டாம் என்றிருப்பது பெரிய தவறாகிவிடாது.’ என தெரிவித்துள்ளார்.