அஜித் சார் பக்கம் எந்த பிரச்சனையும் இல்லை… ‘AK 62’ குறித்து மனம் திறந்த விக்னேஷ் சிவன்.!
நடிகர் அஜித்குமாரின் 62-வது திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயங்குவதாகவும், படத்தை லைக்கா தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. பிறகு சில காரணங்களால் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேறியதாகவும் தகவல் பரவியது.
இதுவரை பேசாமல் இருந்த விக்னேஷ் சிவன் முதன் முறையாக சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்து அஜித் படம் பற்றி பேசியுள்ளார். இது குறித்து பேசிய விக்னேஷ் சிவன் ” அஜித் சார் பக்கம் எந்த பிரச்சனையும் இல்லை.. எனக்கு கிடைச்ச வாய்ப்பு இப்போ மகிழ் திருமேனி மாதிரி ஒருத்தருக்கு கிடைச்சதுல மகிழ்ச்சி.
மற்றபடி, ஒரு அஜித் சாருடைய ரசிகரா இந்த படத்தை நான் என்ஜாய் செய்து பார்ப்பேன்” என கூறியுள்ளார். இதன் மூலம் அஜித்தின் 62-வது படத்தை இயக்குவது மகிழ்திருமேனி என்பது உறுதியாகியுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பேட்டியில் தொடர்ந்து பேசிய விக்னேஷ் சிவன் ” தானா சேர்ந்த கூட்டம் படத்துக்கு முன்னாடி ஒரு செயலி சம்மந்தப்பட்ட கதை எழுதுனேன். இப்போ அந்த கதையில தான் பிரதீப் ரங்கநாதனை வைத்து படம் எடுக்க முடிவு செய்துள்ளேன். அதற்கான பேச்சுவார்தையும் நடைபெற்று வருகிறது” என கூறியுள்ளார் .