கடந்த ஜனவரி 11-ஆம் தேதி விஜய் நடித்த வாரிசு திரைப்படமும், அஜித் நடித்த துணிவு திரைப்படமும் திரையரங்குகளில் வெளியானது. அஜித் நடித்த துணிவு திரைப்படம் பார்க்க சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கிற்கு பரத் எனும் 19-வயது இளைஞர் வந்திருந்தார்,
அப்போது தனது நண்பர்களுடன் மெதுவாக சென்ற லாரி ஒன்றின் மீது ஏறி நடனம் ஆடியுள்ளார்.அப்போது, எதிர்பாராத விதமாக திடீரென பரத்குமார் தவறி ரோட்டில் விழுந்தார். இதனால் முதுகு தண்டில் பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்த பரத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் ரசிகர்களுக்கு இது போன்ற செயல்களில் ஈடுபடவேண்டாம் என அறிவுரையை வழங்கி வருகிறார்கள். அந்த வகையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜும் சமீபத்திய பேட்டி ஒன்றில் அறிவுரையை வழங்கியுள்ளார்.
இது குறித்து பேசிய ” சினிமா என்பது பொழுதுபோக்குக்கானது மட்டுமே.
உயிரைவிடும் அளவிற்கு அதற்கு முக்கியத்துவம் அளிக்கத் தேவையில்லை. சந்தோஷமாகச் சென்று படம் பார்த்துவிட்டு வீடு திரும்பினாலே போதும். உயிர் போகும் அளவிற்குக் கொண்டாட்டங்கள் தேவையில்லை” என கூறியுள்ளார்.
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட…
சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இந்த வாரம் திங்கள் அன்று தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது.…
துபாய் : நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி ரேஸிங்கில் அதீத ஆர்வம் கொண்டவர். 2000த்தின் தொடக்கத்தில் ரேஸிங்கில் கலந்து கொண்ட…
குஜராத் : நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…