மார்க்கெட் இல்ல ஆனா கோடிகளில் புரளும் நடிகை தமன்னா! எப்படி தெரியுமா?
நடிகை தமன்னா கடைசியாக ஜெயிலர் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் அவரை பிரபலப்படுத்தியதோ இல்லையோ அவர் படத்தில் இடம்பெற்றிருந்த ‘காவாலா’ பாடலில் நடனம் ஆடியது அவரை எங்கயோ கொண்டு சென்றது என்றே சொல்லலாம். இந்த பாடல் வெளியான சமயத்தில் இருந்து தமன்னா தான் ட்ரெண்டிங்கில் இருக்கிறார்.
ஆனாலும், அவருக்கு பெரிய அளவில் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வரவே இல்லை. தற்போது தமிழில் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் தமன்னா ஹிந்தியில் ஒரு திரைப்படத்திலும், மலையாளத்தில் ஒரு திரைப்படத்திலும் நடித்து வருகிறார். விரைவில் அவர் ஒரு தமிழ் படத்தில் நடிப்பாரா என ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள்.
இதற்கிடையில். ‘காவாலா’ பாடலில் மூலம் நடிகை தமன்னா பல கோடிகளை சம்பாதித்து வருவதாக கூறப்படுகிறது. அது எப்படி என்றால் தமன்னா ஏதாவது நிகழ்ச்சிக்கு வந்தாலும் கூட ரசிகர்கள் மற்றும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் அவரை காவலா பாடலுக்கு நடனம் ஆட சொல்லி தான் கேட்டு வருகிறார்கள். எனவே ஒரு நிகழ்ச்சியில் தமன்னாவே இந்த பாடலுக்கு நடனமாட கூப்பிட்டால் கூட அந்த பாடலில் நடனம் ஆடுவதற்கு மட்டுமே ஒரு கோடி வாங்கி வருகிறாராம்.
அந்த விஷயத்தை கார்த்தி தான் எனக்கு கற்று கொடுத்தார்! மனம் திறந்த தமன்னா!
ஜெயிலர் படம் வெளியான சமயத்தில் இருந்து இதுவரை அவர் பல மேடைகளிலும் இந்த பாடலை ஆடி இருக்கிறார் . எனவே ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காவாலா பாடலில் நடனமாடுவதற்கே ஒரு கோடி வாங்கினார் என்றால் கிட்டத்தட்ட ஒரு படத்தில் நடித்த சம்பளத்தை அவர் ஒரே பாடலில் ஆடி வாங்கி விடுவார். இப்படித்தான் மார்க்கெட்டே இல்லை பட வாய்ப்பு இல்லை என்றாலும் தமன்னா பல கோடிகளை சம்பாதித்து வருவதாகவும் சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
அது மட்டும் இன்றி நடிகை ரம்பாவின் நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது . அந்த நிகழ்ச்சியில் நடிகை தமன்னாவும் கலந்து கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதற்காக நடிகை தமன்னா கிட்டத்தட்ட 40 லட்சம் கேட்டதாகவும் பிரபல சினிமா செய்திகள் சேனல் வலைப்பேச்சு தெரிவித்துள்ளது.