விவாகரத்தில் துளியும் நம்பிக்கை இல்லை.! திருமணம் குறித்த கேள்விக்கு திரிஷா அதிரடி பதில்.!
நடிகை த்ரிஷா 39 வயதாகியும் இன்னும் யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் தொடர்ந்து படங்களில் மட்டும் நடித்து வருகிறார். அவர் திருமணத்தில் ஆர்வம் காட்டவில்லை என்றாலும் கூட அவரது ரசிகர்கள் த்ரிஷாவுக்கு எப்போது தான் திருமணம் முடியும் என ஆவலுடன் காத்துள்ளனர்.
ஆனால், த்ரிஷா திருமணம் குறித்து எந்த ஒரு விஷியத்தையும் வெளிப்படுத்தவே இல்லை. இதனையடுத்து சமீபத்திய ஒரு பேட்டியில் த்ரிஷா திருமணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். இது குறித்து பேசிய த்ரிஷா “திருமணம் குறித்த கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. ஆனால், திருமணம் செய்தால் நான் அந்த பந்தத்தை முறிக்க மாட்டேன், அது எனக்கு சுத்தமாக பிடிக்காது.
எனக்கு தெரிந்த சிலர் அவர்களுக்கு பிடிக்காத வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். அப்படி ஒரு வாழ்க்கை எனக்கு வேண்டாம் அதை நான் விரும்பவில்லை” என்று கூறியுள்ளார். அவர் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்களேன்- அவ்ளோ அசிங்கமா பண்றாங்க… ரொம்ப கஷ்டமா இருந்தது… மன வருத்தத்தில் ரேஷ்மா.!
மேலும் நடிகை பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றியை தொடர்ந்து த்ரிஷா அடுத்ததாக “தி ரோடு” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். விரைவில் இந்த திரைப்படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.