‘பாடகர்களுக்கு மரணமில்லை’…பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு வைரமுத்து இரங்கல்.!
பிரபல பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் இன்று காலமானார். இவருக்கு வயது 78. நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் நெற்றியில் காயங்களுடன் இவர் இறந்து கிடந்துள்ளார். வீட்டுக்குள் நடந்து சென்றபோது வழுக்கி விழுந்து உயிரிழந்தாரா என ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, இந்தி, கன்னடம், மலையாளம், அசாமி, பெங்காலி, ஓடியா என 19-மொழிகளில் 10.000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி தன்னுடைய வசீய குரலால் மயக்கிய வாணி ஜெயராம் மறைவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
மேலும் வாணி ஜெயராம் மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், படலாசிரியர் வைரமுத்து ஊடகத்தின் நேரலையில் வாணி ஜெயராம் மறைவுக்கு தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய வைரமுத்து ” வாணி ஜெயராம் மறைவு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
பாடகர்களுக்கு என்றுமே மரணமில்லை. தியாகராஜ பாகவதர், எம்.எஸ். சுப்புலட்சுமி, டி.எம்.சௌந்தரராஜன், ஏ.எம்.ராஜா, பி.யு.சின்னப்பா, எம்.எல்.வசந்தகுமாரி ஆகியோருக்கு மரணமுண்டா?இவர்கள் அனைவருமே காற்றில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். நம்மளோடு பாடிக் கொண்டே தான் இருக்கிறார்கள். அவர்களுடைய பட்டியலில் இன்று வாணி ஜெயராம் இணைந்து இருக்கிறார். வாழ்க வாணி ஜெயராம், வாழ்க அவரது இசைப்புகழ்” என கூறிள்ளார்.