அந்த விஷயத்தில் விருப்பமே இல்லை.. நைசாக நழுவிய நம்ம ‘கட்டா குஸ்தி’ பூங்குழலி.!
பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை கொள்ளயடித்தவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. இந்த படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு பல பெரிய படங்களில் ஹீரோயினாகவும், முக்கியமான கதாபாத்திரத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது.
அதன்படி, இவர் தற்போது நடிகர் விஸ்ணு விஷாலுக்கு ஜோடியாக “கட்டா குஸ்தி” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த பலரும் அருமையாக இருப்பதாக தெரிவித்து வருகிறார்கள்.
இதையும் படியுங்களேன்- எனக்கு 2-வது திருமணமா..? ரொம்ப..ரொம்ப மோசம்…செம கடுப்பில் நடிகை மீனா.!
32 வயதாகியும் இன்னும் யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் இவரிடம் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரிடம் திருமணம் குறித்த கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர் நைசாக பதில் சொல்லி நழுவியுள்ளார்.
இது குறித்து அவரிடம் தொகுப்பாளர் நீங்கள் காதல் திருமணமா செய்துகொள்வீர்களா? அல்லது பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமா? என்று கேள்வி கேட்டார். இதற்கு பதில் அளித்த அவர் ‘எனக்கு திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை’ என்று அதிரடியாக கூறி நைசாக நழுவியுள்ளார்.