இந்த ஆண்டு ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பீஸ்ட்,கேஜிஎப் 2 கடந்த ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியானது. இதில் விஜய் நடித்த பீஸ்ட் 13-ஆம் தேதியும், யாஷ் நடித்த கேஜிஎப் 2 திரைப்படம் 14-ஆம் தேதியும் வெளியானது.
பீஸ்ட் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தது. ஆனால் வசூல் ரீதியாக படம் வெற்றிபெற்றது. கேஜிஎப் 2 படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வெற்றியை அடைந்துள்ளது. இன்னும் பல திரையரங்குகளில் படம் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் , விஜயின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவரிடம் பீஸ்ட்,கேஜிஎப் 2 பார்த்தீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவரும் இரண்டு படங்களிலும் பார்த்ததாக கூறியுள்ளார்.
கேஜிஎப் 2 குறித்து அவர் கூறியது ” படம் பார்த்தேன் நிறைய லாஜிக் மிஸ்டேக் இருக்கு. குறிப்பாக ஒரு காட்சியில் ஹீரோ துப்பாக்கியுடன் நாடாளுமன்றத்திற்குள் செல்கிறார். அப்போது, அவரை பார்த்த மந்திரிகள் அலறி அடித்துக்கொண்டு ஓடுகின்றனர். பிரதமர் முன்னிலையில் ஹீரோ ஒரு மந்திரியை சுட்டு கொள்கிறார்.
அனால், எத்தனை அடுக்கு பாதுகாப்புகளை தாண்டி ஒரு நாடாளுமன்றத்தில் நுழைய வேண்டும். ஆனால் கே.ஜி.எப் 2வில் அதனை காட்டவில்லை. அது ஒரு லாஜிக் மிஸ்டேக். ஆனால், அதனை மறக்கடித்து, அனைவரையும் கைதட்ட வைத்தது கே.ஜி.எப் 2. திரைக்கதை மிகவும் அருமையாக இருந்தது”. என வெளிப்படையாக பேசியுள்ளார்.
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…
காஞ்சிபுரம்: வருகின்ற ஜன.20ம்தேதி தவெக தலைவர் விஜய், பரந்தூரில் இருக்கும் மக்களை சந்திக்க காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்க்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல்…