சினிமாவில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது – நடிகை தீபிகா படுகோனே
நடிகை தீபிகா படுகோன் தமிழ் சினிமாவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கோச்சடையான் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். மேலும், இவர் பல இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், முந்தைய காலத்தில், நடிகைகள் என்றாலே அவர்களுக்கு மதிப்பு கொடுப்பதில்லை. அவர்களை மரியாதை இல்லாமல் நடத்துவார்கள். யாருமே சினிமாவிற்கு வருவதற்கு தயக்கம் காட்டுவதுண்டு.
ஆனால், இந்த நிலை தற்போது மாறி, முன்பெல்லாம் கதாநாயகர்களுக்காக கதை எழுதும் நிலைமை இருந்தது. கதாநாயகிகள் என்றால் ஆடிப்பாடுகிறவர்கள், ரசிகர்களுக்கு போரடிக்காமல் இருப்பதற்காக வந்து போகிறவர்கள் என்று நினைத்தார்கள். அது இப்போது மாறி இருக்கிறது. கதாநாயகிகளுக்கு என்று பிரத்யேகமாக கதை எழுதும் காலம் வந்து விட்டது என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், சினிமா துறை மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. சினிமாவில் நல்ல மாற்றமும் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.