இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் தான் தி கோட். இந்த திரைப்படத்தில் பிரசாந்த், யோகி பாபு, ஜெயராம், பார்வதி நாயர், மீனாட்சி சவுத்ரி, லைலா, சினேகா, பிரபுதேவா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது.
விடாமுயற்சி படத்திலிருந்து வந்த முதல் அதிகாரப்பூர்வ அப்டேட்!
இந்நிலையில், ‘தி கோட்’ படத்தின் திரையரங்கிற்கு பிறகு வெளியாகும் ஓடிடி உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கி இருந்ததாக முன்னதாகவே தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால், தற்போது தி கோட் படத்தினை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கவில்லையாம்.
முதலில் படத்தின் ஓடிடி உரிமையின் விற்பனை விவரம் குறித்து தயாரிப்பு நிறுவனமும் நெட்பிளிக்ஸ் நிறுவனமும் பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளதாம். ஆனால், தயாரிப்பு நிறுவனம் நெட்பிளிக்ஸ் நிறுவனம் கேட்ட தொகையை விட அதிக தொகை கேட்டதாம். இதனால் படமே வேண்டாம் என்று நெட்பிளிக்ஸ் நிறுவனம் தெறித்து ஓடிவிட்டதாம்.
சமீபத்தில் கூட நெட்பிளிக்ஸ் நிறுவனம் தங்களுடைய நிறுவனங்கள் வாங்கி இருக்கும் இந்த ஆண்டுக்கான படங்கள் குறித்த அறிவிப்பை வெளியீட்டு இருந்தது. அதில் பல படங்கள் இடம்பெற்று இருந்தது. தி கோட் படம் பெயர் வரவில்லை. எனவே, தொகை அதிகமாக கேட்ட காரணத்தால் தான் நெட்பிளிக்ஸ் நிறுவனம் தி கோட் படத்தை வாங்கவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…