இனிமே டாப் ஹீரோக்களை வச்சு தான் படம்? வேல்ஸ் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் நிறுவனம் கோமாளி, எனை நோக்கி பாயும் தோட்டா,வெந்து தனிந்து காடு, உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்து இருக்கிறது. கடைசியாக ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியான “சிங்கப்பூர் சலூன்” திரைப்படத்தை தயாரித்து இருந்தது.
இயக்குனர் கோகுல் இயக்கத்தில் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் வெளியானது. படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கிறது என்றே கூறலாம். இன்னும் பல திரையரங்குகளில் படம் வெற்றிகரமாக ஓடிகொண்டு இருக்கிறது.
சிங்கப்பூர் சலூன் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
இந்நிலையில், இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வேல்ஸ் நிறுவனம் அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளதாம். அது என்னவென்றால், இனிமேல் சிறிய பட்ஜெட் படங்களை தயாரிக்கவேண்டாம். பெரிய பெரிய பட்ஜெட் படங்களை மட்டுமே தயாரிக்கவேண்டும் என்று தெளிவான ஒரு முடிவை எடுத்து இருக்கிறதாம்.
அது மட்டுமின்றி பெரிய பட்ஜெட் படங்கள் என்றால் பெரிய பெரிய ஹீரோக்களான ரஜினி, சூர்யா, அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்களை தயாரிக்கும் வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே அந்த படங்களை தயாரிப்போம் அப்படி இல்லை என்றால் எந்த படத்தையும் தயாரிக்கவில்லை என்றாலும் கூட சற்று அமைதியாக இருக்கலாம் என்று திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை பிரபல யூடியூப் சேனலான வலைப்பேச்சு தெரிவித்துள்ளது.