விஜய் : தளபதி 69 திரைப்படத்தில் நடிக்க சம்பளமாக விஜய் 275 கோடிகளுக்கு மேல் வாங்கி இருப்பதாக பிக் பாஸ் பிரபலம் அபிஷேக் ராஜா தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் நடித்து வரும் நிலையில், இந்த படத்திற்கு பிறகு தன்னுடைய 69-வது படத்தில் நடிக்கிறார். கோட் படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் நடிக்க நடிகர் விஜய் 200 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது.
அந்த தகவலே கோலிவுட் சினிமாவில் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில், அதனை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு தளபதி 69 படத்தில் அவர் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, விஜயின் கடைசி படம் அது தான் என்பதால் கண்டிப்பாக படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என்பதால் விஜய் சம்பளம் அதிகமாக உயர்ந்துள்ளதாம்.
கிட்டத்தட்ட விஜய் தன்னுடைய 69-வது படத்தில் நடிக்க சம்பளமாக 275 கோடி வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த தகவலை சினிமா விமர்சகரும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமான அபிஷேக் ராஜா யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது “விஜய் 50-வது படம் சுறா சுறா படத்திற்கு பிறகு அவர் 18 படங்களில் நடித்து இருக்கிறார்.
அந்த 18 படங்களில் அதிகம் சம்பளம் வாங்கும் தமிழ் சினிமாவில் முதல் நடிகராக மாறிவிட்டார். சமீபத்தில் ரஜினிகாந்த் அவரை ஜெயிலர் படத்தில் மிஞ்சினார். ஆனால், விஜய் தன்னுடைய 69-வது படத்தில் நடிக்க 275 கோடிகளுக்கு மேல் சம்பளம் வாங்கி இருக்கிறார். இவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்றால் அவருடைய மார்க்கெட் அப்படி இருக்கிறது” எனவும் தெரிவித்துள்ளார்.
தளபதி 69 படத்தில் நடிக்க விஜய் வாங்கும் சம்பளம் குறித்த தகவலை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர். மேலும், தளபதி 69 படத்தினை இயக்குனர் எச்.வினோத் இயக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இன்னும் இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…