விடாமுயற்சி படத்தால் நொந்துபோன நடிகை த்ரிஷா?

vidamuyarchi

பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் மீண்டும் சூப்பரான ரீ-என்ட்ரி கொடுத்த நடிகை த்ரிஷாவுக்கு தொடர்ச்சியா பெரிய பெரிய படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், கடைசியாக அவர் விஜய்க்கு ஜோடியாக லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு இவருக்கு விடாமுயற்சி, சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஒரு திரைப்படம், மற்றும் கமல்ஹாசன் நடிக்கும் தக்லைஃப் ஆகிய படங்களில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். இதில் விடாமுயற்சி படத்திற்கான படப்பிடிப்பில் தான் த்ரிஷா இருக்கிறார்.

சர்ச்சை கருத்து நான் சொல்லவில்ல….இருந்தாலும் தமிழ்‌ மக்களிடம்‌ மன்னிப்புக் கேட்கிறேன் -தன்யா பாலகிருஷ்ணா

சமீபத்தில் விடாமுயற்சி படத்திற்கான அஜர்பைஜான் நாட்டில் முதல் அட்டவணை நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அடுத்ததாக அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக படக்குழு இடத்தை தேடி வருகிறது. இந்நிலையில், விடாமுயற்சி படக்குழு த்ரிஷாவை மிகவும் டென்ஷன் ஆக்கியுள்ளதாம்.

ஏனென்றால், நடிகை திரிஷா விடாமுயற்சி படத்தின் கால்ஷீட் கொடுத்துவிட்டு வேறு படங்களில் நடிக்க முடியாமல் தவித்து வருகிறாராம். விடாமுயற்சி படக்குழுவும் த்ரிஷாவை விடமால் லொகேஷன் தேடுகிறோம் காத்திருங்கள் என்று கூறிவருகிறார்களாம்.

இதனால் த்ரிஷா தான் கமிட் ஆகி இருக்கும் மற்ற படங்களுக்கு நடிக்க செல்லவே முடியவில்லையாம். எப்படியாவது விடாமுயற்சி படத்தில் நடித்துமுடித்துவிட்டு சீக்கிரம் அடுத்தப்படத்திற்கு செல்லவேண்டும் என்று முடிவெடுத்து இருக்கிறாராம். மேலும், விடாமுயற்சி படத்தில் அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்