சினிமா

புத்தாண்டு அன்று வெடிக்கும் ‘தளபதி 68’ டைட்டில்! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அப்டேட்!

Published by
பால முருகன்

விஜய் நடித்து வரும் தளபதி 68 படத்திற்கான அப்டேட்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்றாலும் கூட தகவல்களாக வெளியாகி ரசிகர்களை உற்சாக படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது கிடைத்திருக்கும் தகவல் என்னவென்றால், தளபதி 68 படத்திற்கான தலைப்பு எப்போது வெளியாகும் என்பது பற்றிய தகவல் தான்.

அதன்படி, தளபதி 68 படத்திற்கான தலைப்பை வரும் (2024) ஜனவரி 1-ஆம் தேதி வெளியிட திட்டமிடபட்டிருக்கிறதாம். அதாவது புத்தான்டு பிறந்து சரியாக 12 மணிக்கு ரசிகர்களுக்கு விருந்தாக தலைப்பை வெளியிட படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறதாம். வழக்கமாக ஒரு திரைப்படம் தலைப்பு வைக்காமல் உருவாகி கொண்டு வருகிறது என்றால் கடைசி நேரத்தில் தலைப்பு வைக்கும் போது வேறு யாரவது முன்பே தலைப்பை பதிவு செய்து வைத்துவிடுவார்கள்.

இரவு நேரங்களில் படப்பிடிப்பு…ரொம்ப ஏக்கமா இருக்கு! நடிகை சஞ்சிதா ஷெட்டி வேதனை!

இதனால் தலைப்பு விஷயத்தை வைத்து கடைசி நேரத்தில் பிரச்சனைகள் ஏற்படும். ஆனால், ஏஜிஎஸ் நிறுவனம் முன்னதாகவே இதனை கணித்து ஒரு 4 தலைப்பை தேர்வு செய்து பதிவு செய்து வைத்திருக்கிறதாம். அந்த 4 தலைப்பில் எதாவது ஒன்று தான் தளபதி 68 படத்தின் தலைப்பாக வைக்கப்படவுள்ளதாம். விஜய் என்ன தலைப்பு சம்மதம் தெரிவிக்கிறாரோ அந்த தலைப்பு தான் இறுதியாக முடிவு செய்யப்படும்.

எனவே, விஜய் கூறும் அந்த தலைப்பு தான் வரும் புத்தான்டு முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘தளபதி 68’ படத்திற்கான முதல் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த வாரம் அங்கு படப்பிடிப்பு முடிந்தது. அதனை தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது.

ஹீரோயினா நடிச்சு போர் அடிச்சிட்டு! அதான் அப்படி இறங்க போறேன்- வசுந்தரா பேச்சு!

மேலும், ‘தளபதி 68 ‘ திரைப்படத்தில் பிரபுதேவா, லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம், மோகன், அஜ்மல் அமீர், வைபவ், யோகி பாபு, விடிவி கணேஷ், பிரேம்கி அமரன், அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கியமான கதாபத்திரங்களில் நடித்து வருகிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

சர்ச்சை பேச்சு: ”மன்னிப்பை ஏற்க முடியாது” – அமைச்சர் விஜய் ஷாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!சர்ச்சை பேச்சு: ”மன்னிப்பை ஏற்க முடியாது” – அமைச்சர் விஜய் ஷாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!

சர்ச்சை பேச்சு: ”மன்னிப்பை ஏற்க முடியாது” – அமைச்சர் விஜய் ஷாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!

டெல்லி : பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களுக்கு, அவர்களின் சொந்த சகோதரியைக் கொண்டே பாடம் கற்பித்துள்ளோம் என…

23 minutes ago
எப்போது உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.? தென்மண்டல தலைவர் அமுதா விளக்கம்.!எப்போது உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.? தென்மண்டல தலைவர் அமுதா விளக்கம்.!

எப்போது உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.? தென்மண்டல தலைவர் அமுதா விளக்கம்.!

சென்னை : மத்திய கிழக்கு அரபிக் கடலில் வரும் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.…

32 minutes ago
காருக்குள் கருகிய நிலையில் சடலம்.., தூத்துக்குடி அருகே பெரும் பரபரப்பு.!காருக்குள் கருகிய நிலையில் சடலம்.., தூத்துக்குடி அருகே பெரும் பரபரப்பு.!

காருக்குள் கருகிய நிலையில் சடலம்.., தூத்துக்குடி அருகே பெரும் பரபரப்பு.!

தூத்துக்குடி மாவட்டத்தில், காருக்குள் கருகிய நிலையில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு…

51 minutes ago

தமிழ்நாட்டில் மஞ்சள் எச்சரிக்கை! இன்றும், நாளையும் மிக கனமழை – வானிலை மையம்.!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி…

1 hour ago

சடசடவென திருமணத்திற்கு ரெடியாகும் விஷால்! பொண்ணு இந்த நடிகையா?

சென்னை : நடிகர் விஷால் எதாவது நிகழ்ச்சிக்கு சென்றாலே அவரிடம் அடுத்த என படம் நடிக்கிறீர்கள் என்று கேட்பதை விட உங்களுக்கு…

3 hours ago

பாமகவில் ராமதாஸுக்கு பின் அன்புமணி தான் – ஜி.கே.மணி திட்டவட்டம்!

சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் நடைபெறுவதை…

4 hours ago