தமிழ் சினிமாவில் அடுத்ததாக ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படங்களில் சூர்யா நடித்து வரும் கங்குவா மற்றும் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் ஆகிய படங்கள் இருக்கிறது என்று கூறலாம். இந்த இரண்டு படங்களையும் ஞானவேல் ராஜா தான் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.
பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஏற்கனவே முடிந்துவிட்டது. இதில் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படம் குடியரசு தினத்தை முன்னிட்டு கடந்த ஜனவரி 26-ஆம் தேதி வெளியாகும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
பிறகு சில காரணங்களால் அதை தள்ளிப்போட்டுபடம் ஏப்ரலில் வெளியிடுவதாக இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் அறிவித்தனர். இன்னும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை அதைப்போலவே, சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் ‘கங்குவா’. படத்தின் ரிலீஸ் தேதியும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
வடிவேலுக்கு புடிச்சா தான் வாய்ப்பு! ஆர்த்தி போட்டுடைத்த உண்மை!
இந்த திரைப்படத்தில் 3D சம்மந்தப்பட்ட வேலைகள் மற்றும் CG வேலைகள் நிறைய இருக்கிறது என்பதால் அதுவே முடிய இன்னும் சில மாதங்கள் ஆகுமாம். அதனால்தான் ரிலீஸ் தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை. சூர்யாவின் பாகம் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. பாபி டெவோலின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.
கங்குவா படம் தாமதமானால், கிராபிக்ஸ் பணிகள் காரணமாக தங்கலான் படம் தாமதமாகும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நிதி பிரச்சனையால் இந்த இரண்டு படங்கள் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறதாம். இந்த செய்திதான் தற்போது கோலிவுட்டில் பரபரப்பு செய்தியாக பேசப்பட்டது வருகிறது. இப்படியான தகவல் வெளியாக முக்கிய காரணமே இரண்டு படங்களின் ரிலீஸ் தேதி பற்றி அறிவிப்பு வெளியாகாதது தான். எனவே, இந்த தகவல் உண்மையான தகவலா அல்லது வதந்தியா என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…