நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘தி கோட்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது, படத்தில் பிரசாந்த், சினேகா, மோகன், யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். படத்திற்கான ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் முன்னதாக இந்த திரைப்படம் இந்த ஆண்டு ஜீன் 22-ஆம் தேதி விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால், தற்போது படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாம்.
படம் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருவதால் படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைக்கவேண்டும் என்பதால் விடுமுறை நாட்களில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாம். அதன்படி ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறதாம். ஆனால், அதே தேதியில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா 2 திரைப்படம் வெளியாகவுள்ளது.
புஷ்பா 2 படம் வெளியாவதால் கோட் படத்திற்கு என்ன பிரச்சனை என்றால் புஷ்பா 2 படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தான் வாங்கு கிறதாம். எனவே ரெட் ஜெயண்ட் வாங்கினால் கண்டிப்பாக கோட் படத்திற்கு கிடைக்கும் திரையரங்குகளின் எண்ணிக்கை கொஞ்சம் குறையும்.
ஒரு வேளை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமே கோட் படத்தை வாங்கினாலும் கூட புஷ்பா 2 படத்தையும் அந்த படத்தையும் ஒரே நாளில் வெளியிடுவது சந்தேகமான விஷயம் தான். எனவே, எந்த தேதியில் தி கோட் படத்தை வெளியிடலாம் என படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் கூறபடுகிறது. இந்த தகவலை வலைப்பேச்சு தெரிவித்துள்ளது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…