புஷ்பா 2 : இந்திய சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக இருக்கும் திரைப்படங்களில் ‘புஷ்பா 2 ‘ படமும் ஒன்று. அல்லு அர்ஜுன் நடிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. எனவே, படம் வெளியாக இன்னும் 2 மாதங்கள் மட்டும் இருக்கும் நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க முக்கிய காரணமே படத்தின் படப்பிடிப்பு இன்னும் முழுவதுமாக முடியவில்லையாம். அதைபோல், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இன்னும் முடியவில்லை. எனவே, இதற்கு எல்லாம் இன்னும் சில மாதங்கள் தேவை என்பதால் படத்தினை இப்போது ரிலீஸ் செய்தால் சரியாக இருக்காது என படக்குழுவினர் மற்றும் தயாரிப்பாளர்கள் யோசித்து வருகிறார்களாம்.
இன்னும் படம் ஒத்திவைக்கப்படுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. தகவல்களாக மட்டுமே படம் தள்ளி செல்லவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி செல்லவிருக்கும் தகவல் ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுடன் ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், அனசுயா பரத்வாஜ், சுனில், டாலி தனஞ்சய், பவானி கரணம், ஸ்ரீதேஜ், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…