GOAT Audio Launch : கோட் படத்தின் இசைவெளியீட்டு விழா மலேஷியாவில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விஜய் நடிக்கும் படங்கள் என்றாலே படம் வெளியாவதற்கு முன்பு பிரமாண்டமாக இசை வெளியீட்டு விழா நடைபெறுவது வழக்கமான ஒன்று. கடைசியாக வாரிசு திரைப்படத்திற்கு இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், சில காரணங்களால் ரத்து செய்யப்பட்டது.
லியோ படத்தை தொடர்ந்து விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஏற்கனவே, படத்தில் இருந்து முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. படத்தின் மொத்த பாடல்கள் எப்போது வெளியாகும் இசை வெளியீட்டு விழா நடக்குமா? என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கும் நிலையில், அவர்களுக்காகவே சூப்பரான தகவல் கிடைத்து இருக்கிறது. கோட் படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறதாம்.
துபாயில் நடத்தலாமா அல்லது மலேஷியாவில் நடத்தலாமா? என்று யோசித்து வந்த நிலையில், தற்போது 90 % மலேஷியாவில் நடத்த முடிவெடுத்து இருக்கிறதாம். அதற்கான பேச்சுவார்தையும் தீவிரமாக நடைபெற்று வருகிறதாம். கோட் படத்தின் இசைவெளியீட்டு விழா மலேஷியாவில் நடைபெறவுள்ள தகவலை பிரபல யூடியூப் சேனலான வலைப்பேச்சு தெரிவித்துள்ளது.
இந்த தகவல் உண்மையா அல்லது வதந்தியா என்று படக்குழு விளக்கம் கொடுத்தால் தான் தெரிய வரும். இருப்பினும், விஜய் கடைசியாக நடித்த லியோ படத்திற்கு இசைவெளியீட்டு விழா நடைபெறவில்லை என்பதாலே ரசிகர்கள் சோகத்தில் இருந்தார்கள். இந்த சூழலில் கோட் படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…