மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகும் பருத்திவீரன்?

Paruthiveeran Re-Release

சினிமா துறையில் தற்போது ட்ரெண்டிங்கான விஷயங்களில் ஒன்று ஆரம்ப காலகட்டத்தில் வெளியான படங்கள் தற்போது ரிலீஸ் செய்யப்படுவது தான்.  குறிப்பாக 3, மயக்கம் என்ன, வாரணம் ஆயிரம், காக்க காக்க,  உள்ளிட்ட படங்கள் எல்லாம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வெளியாகி மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பு பெற்றது.

ரீ-ரிலீஸ் செய்யப்படுவதால் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் படங்களின் தயாரிப்பு நிறுவனங்கள் தாங்கள் தயாரித்த படங்களை மீண்டும் ரீ-ரிலீஸ்  செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது பருத்திவீரன் திரைப்படம் ரீ-ரிலீஸ்  செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இயக்குனர் அமீர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, பிரியாமணி ஆகியோர் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான திரைப்படம் பருத்திவீரன். இந்த திரைப்படத்தில் சரவணன், கஞ்சா கருப்பு, பொன்வண்ணன், சம்பத்ராஜ், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.

இந்த திரைப்படத்தை ஞானவேல் ராஜா ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரித்து இருந்தார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத படங்களின் பட்டியலில் கண்டிப்பாக இந்த திரைப்படம் இருக்கும் என்று கூறலாம். ஏனென்றால் அந்த அளவிற்கு ஒரு தரமான நல்ல திரைப்படத்தை இயக்குனர் அமீர் கொடுத்திருப்பார்.

இன்று முதல் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு இனிதே ஆரம்பம்!

2007 ஆண்டுகளில் வெளியான இந்த திரைப்படம் இன்று வரை பலருடைய பேவரைட் படமாகவும் இருக்கிறது. இந்த நிலையில், இந்த திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஞானவேல் ராஜா பேட்டி ஒன்றில் இயக்குனர் அமீர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரிய விவகாரமாக மாறியது.  அமீர் பற்றி ஞானவேல் பேசியது தவறு என அமீருக்கு ஆதரவாக திரையுலகில் பலரும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர்.  அதன்பன்,  ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவிப்பதாக கடிதம் ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.  இந்த விவகாரம் ஒரு பக்கம் முடிந்திருக்கும் நிலையில் தற்போது படத்தை ஞானவேல் ராஜா ரீ-ரிலீஸ்  செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi