அமரன் படம் எப்போது ரிலீஸ்? வெறித்தனமான லேட்டஸ்ட் அப்டேட்!
அமரன் : சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படம் வரும் செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தன்னுடைய 21-வது படமான “அமரன்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை இயக்குனர் ராஜ்குமார் பெரிய சாமி இயக்குகிறார். படத்தினை நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய்பல்லவி நடித்து வருகிறார். படத்தில் லல்லு பிரசாத், சுரேஷ் சக்ரவர்த்தி, புவன் அரோரா, அஜே நாகா, மிர் சல்மான், கௌரவ் வெங்கடேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
2014 ஆம் ஆண்டு காஷ்மீரின் சோபியான் பகுதியில் பயங்கரவாதிகளுடனான என்கவுன்டரின் போது வீரமரணம் அடைந்த ஏசி விருது பெற்ற மேஜர் முகுந்த் வரதராஜ்ரனின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையை மையமாக இந்த ‘அமரன்’ படம் எடுக்கப்பட்டு வருகிறது. படத்திற்கான டைட்டில் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பையே அதிகமாக்கி இருந்தது என்றே சொல்லலாம்.
படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்து இருக்கும் நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் கிடைத்து இருக்கிறது. அதன்படி, அமரன் படம் வரும் செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி வெளியாகும் என சினிமா செய்தி தொடர்பாளர் கிறிஸ்டோபர் கனகராஜ் தெரிவித்துள்ளார். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
SK’s #Amaran – Sept 27 Release.💥🔥
— Christopher Kanagaraj (@Chrissuccess) May 29, 2024