thalapathy 68 album [file image]
விஜய் நடிக்கும் படங்கள் என்றால் அந்த படங்களில் பாடல்கள் இல்லாமல் இருக்கவே இருக்காது. அந்த அளவிற்கு அவருடைய ரசிகர்களுக்காகவே அவர் படத்தில் குத்துப் பாடல்களை வைக்க சொல்லி விடுவார். ரசிகர்களும் அதனை திரையரங்குகளில் கொண்டாடி மகிழ்வது உண்டு. அந்த வகையில் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா விஜய் கூட்டணி தளபதி 68 திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ளது.
எனவே, இவர்களுடைய கூட்டணி தளபதி 68 படத்தின் மூலம் இணைந்துள்ள காரணத்தால் இந்த படத்தின் ஆல்பத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்புகளே உள்ளது. பெரிதாக இவர்களுடைய கூட்டணி இணையவில்லை என்றாலும் கூட இவர்கள் இருவருடைய கூட்டணி எப்போது இணையும் என்று ரசிகர்கள் பலரும் காத்திருந்தார்கள். எனவே தளபதி 68 படத்தின் மூலம் இணைந்துள்ளதால் படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளார்கள்.
இந்த திரைப்படத்தினை வெங்கட் பிரபு இயக்குகிறார். படத்திற்கான படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், தளபதி 68 படத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள் உள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி, தளபதி 68 படத்தில் மொத்தமாக 5 பாடல்கள் உள்ளதாம்.
மட்டன் எல்லாம் இல்ல! கறார் காட்டிய மேனஜருக்கு கன்னத்தில் போட்ட விஜயகாந்த்!
அந்த 5 பாடல்களும் தற்போது இசையமைத்து கொடுக்கப்பட்டுவிட்டதாம். வழக்கமாக வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் பாடல்கள் எழுதும் அவருடைய தந்தையும் இயக்குனருமான கங்கை அமரன் ஒரு பாடலை எழுதி இருக்கிறாராம். படத்தின் பாடல்கள் எல்லாம் நன்றாக வந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதைப்போல ஏற்கனவே, படத்தில் ஒரு பாடலை எழுதியுள்ள மதன் கார்க்கி படத்தின் முதல் பாடல் நன்றாக வந்திருக்கிறது. அந்த பாடல் ஒரு நல்ல பெப்பி பாடலாக இருக்கும் அந்த பாடலை யார் பாடி இருக்கிறார் என்று சொல்லமாட்டேன்” என்றும் தெரிவித்து இருந்தார். விரைவில் இந்த தளபதி 68 முதல் பாடல் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தலைப்புடன் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…