குட்டையை குழப்பிய சன் டிவி! ‘GOAT’ படத்துக்கு வந்த புதிய சிக்கல்?

The Greatest of All Time

GOAT தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கும் திரைப்படங்களில் விஜய் நடித்து வரும் கோட் படமும் இருக்கிறது. இந்த திரைப்படத்தினை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். படத்திற்க்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த கூட்டணி ஒரே படத்தில் இணைந்துள்ள காரணத்தால்  படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

READ MORE – ஒரு வழியா குறைச்சிட்டாங்க போல! பழைய லுக்கில் அனுஷ்கா! குவிய போகும் பட வாய்ப்புகள்?

அதிலும் குறிப்பாக யுவன் சங்கர் ராஜா மற்றும் விஜய் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஒரு படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் பாடல்கள் மீது இருக்கும் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாகவே படத்தின் ஆடியோ உரிமை கூட வியப்பை ஏற்படுத்தும் விலைக்கு விற்பனை ஆனது. படத்தின் ஆடியோ உரிமையை டி-சீரிஸ் நிறுவனம் 24 கோடி கொடுத்து வாங்கியதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

READ MORE – இப்போ டைம் இல்ல! தனுஷுக்கு அல்வா கொடுத்த மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குனர்!

இந்த நிலையில், தற்போது அதில் தான் ஒரு சிக்கல் ஏற்பட்டு இருக்கிறதாம். அது என்னவென்றால், கோட் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன்டிவி தான் வாங்கி வைத்து இருக்கிறதாம். எனவே படத்தின் பாடல்களை தங்களுடைய சேனல்களிலும் வெளியீடுவோம் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்திடம் கூறியுள்ளதாம்.

READ MORE – பாலா சார் என்னை டார்ச்சர் பண்ணல…அந்தர் பல்டி அடித்த மலையாள நடிகை.!

ஆனால், டி சீரிஸ் நிறுவனம் இதற்கு உடன் படவில்லையாம். அந்த சேனலிலும் ரிலீஸ் ஆனால், தங்களுடைய சேனலுக்கு பார்வையாளர்கள் குறையும் அப்படி சன் டிவி வெளியீட்டால் நாங்கள் ஆடியோ உரிமையை 15 கோடிக்கு தான் வாங்குவோம் என்று கூறிவிட்டார்களாம். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ்இருக்கிறதாம். இந்த தகவலை வலைப்பேச்சு தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்