இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது இவரா?

vichitra saravana vickram raveena

பிக் பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. 82 நாட்களை கடந்து இருக்கும் நிலையில், போட்டி கடுமையாக கொடுக்கப்பட்டு போட்டியாளர்கள் அனைவரும் சுறு சுறுப்பாக விளையாடி வருகிறார்கள். வாரம் வாரம் பிக் பாஸ் வீட்டிற்குள் எலிமினேஷனும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு கூல் சுரேஷ் வெளியேறினார்.

அவரை தொடர்ந்து இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து யார் வெளியேறியுள்ளார் என்ற தகவல் கிடைத்து இருக்கிறது. இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் விசித்ரா, ரவீனா, சரவண விக்ரம் ஆகியோர் இடம்பெற்று இருந்தார்கள். இவர்களில் யார் குறைவான மக்கள் வாக்குகளை பெற்று இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற போகிறார் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது.

தனுஷுக்கு டஃப் கொடுத்த நிக்சன்! பிக் பாஸ் வீட்டில் அசத்தல் நடனம்!

இதனையடுத்து, தற்போது நம்பத்தக்க வட்டாரத்தில் இருந்து கிடைத்த தகவலின் படி, இந்த வாரம் குறைவான மக்கள் வாக்குகளை பெற்று சரவண விக்ரம்  தான் வீட்டை விட்டு வெளியேறியுள்ளாராம். அவர் வீட்டை விட்டு வெளியேறிய அந்த எபிஷோட் நாளை (ஞாயிற்றுக் கிழமை) ஒளிபரப்பாகும் எனவும் கூறப்படுகிறது. பிக் பாஸ் வீட்டிற்குள் பலருக்கும் பிடித்த போட்டியாளராக இருந்த இவர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வெளியான தகவல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமான சரவண விக்ரமுக்கு இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்து இந்த நிகழ்ச்சி அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது. எனவே, அவர் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஏற்கனவே, பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு ஜோவிகாவுக்கு பார்த்திபனிடம் உதவி இயக்குனராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
Vijay -Parandur -Airport
tn rains
RepublicDayParade - Chennai
Nei vilakku (1)
vishal - vijayantony
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay