இது ரொம்ப ஓவர்! படக்குழுவுக்கு கண்டிஷன் போடும் ராஷ்மிகா மந்தனா?
நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து உள்ள காரணத்தால் படக்குழுவுக்கு கண்டிஷன் போடுகிறாராம். அதில் மிகவும் குறிப்பான கண்டிஷன் சாப்பாடு விஷயத்தில் தான் போடுகிறாராம். அதாவது, படப்பிடிப்பு தளங்களில் பணியாற்றும் யூனிட்டில் அனைவர்க்கும் கொடுக்கப்படும் சாப்பாட்டை சாப்பிடமாட்டாராம். தனக்கென்று சமயக்க ஒரு குழுவை வைத்து அதன் மூலம் தனக்கு பிடித்த உணவுகளை செய்ய சொல்லி சாப்பிடுவாராம்.
அது மட்டுமின்றி சமைத்து முடித்த பிறகு தனக்கு பரிமாறுவதற்காகவும் ஒரு குழு ஒன்றையும் அவர் வைத்து இருக்கிறாராம். அவருக்கு என்று படப்பிடிப்பு முடிந்த பின் ஓய்வு எடுக்க கேரவன் ஒன்று கொடுக்கப்பட்டு இருக்கும். அதில் ஒரே ஒரு ஓரத்தில் சமைப்பதற்கான சின்ன சமையல் அறை ஒன்றும் கொடுக்கப்பட்டு இருக்குமாம். அப்படி அந்த மாதிரி சமையல் அறை கொண்ட கேரவன் இல்லை என்றால் உடனடியாக அதே போலவே ஒரு கேரவன் கொண்டு வர சொல்லிவிடுவாராம்.
இந்தியாவில் எந்த இடத்தில் படப்பிடிப்புகள் நடந்தாலும் தனக்கு அந்த கேரவன் கண்டிப்பாக வேண்டும் என்று கண்டிஷனாகவே தெரிவித்து விடுவாராம். பிறகு சமயக்க ஆட்கள் வந்தவுடன் அதில் யாருடைய சமையல் எல்லாம் பிடித்திருக்கிறதோ அவர்களை மட்டுமே அடுத்ததடுத்த படங்களின் படப்பிடிப்புகளில் வந்து சமைக்கவும் சொல்வாராம். அவருக்கு பிடித்த உணவுகளை சமைக்க தேவையான பொருட்களையும் சில சமயம் அவரே வாங்கியும் கொடுத்துவிடுவாராம்.
கோபத்தில் தான் அந்த முடிவு எடுத்தேன்! இயக்குனர் அமீர் பேச்சு!
சில சமயம் வாங்கவில்லை என்றால் படக்குழுவினரை அழைத்து லிஸ்ட் போட்டுவிட்டு இதெல்லாம் எனக்கு வேணும் என்று ஷ்பேஷலாக வாங்கி கேப்பாராம். அது மட்டுமில்லாமல் படப்பிடிப்பு எங்கேயேவாது வெளியே நடந்தால் அங்கு ஹோட்டல் ரூம் வாடைக்கு கொடுத்தாலும் அங்கேயும் தங்கமாட்டாராம். ஏனென்றால், ஹோட்டலில் தங்குவது என்றால் ராஷ்மிகாவுக்கு ரொம்பவே பயமாம்.
இதன் காரணமாக தான் ராஷ்மிகா அதிகமாக மாநிலங்களில் சொந்தமாக வீடுகளை வாங்கிக்கொண்டு வருகிறாராம். அப்படி வீடு வாங்கினால் படப்பிடிப்பு முடிந்த பிறகு வீட்டிற்கு சென்று தங்கிவிட்டு அடுத்த நாள் படப்பிடிப்புக்கு வந்துகொண்டு இருக்கிறாராம். இருந்தாலும் சாப்பாட்டு விஷயத்திற்கு இந்த அளவிற்கு கண்டிஷன் ஓவர் என்று கூறிவருகிறார்கள் நெட்டிசன்கள்.
நடிகை ராஷ்மிகா மந்தனா கடைசியாக ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த படத்தை தொடர்ந்து அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.