Rajinikanth : கவுண்டமணியின் கால்ஷீட் கிடைக்கவேண்டும் என்று ரஜினிகாந்த் பாபா பட சமயத்தில் காத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொதுவாக சினிமாவில் ஹீரோவாக படங்களில் நடிக்கும் ஹீரோக்களின் கால்ஷீட் கிடைப்பது தான் பெரிய பிரச்சனையாக இருக்கும் . ஆனால், கவுண்டமணி காமெடியான கதாபாத்திரங்களில் நடித்து கொண்டு பீக்கில் இருந்த சமயத்தில் அவருடைய கால்ஷீட்காக நடிகர் ரஜினிகாந்தே காத்து இருந்தாராம். கவுண்டமணி நடித்து கொண்டு இருந்த காலத்தில் எல்லாம் அவருடைய காமெடி காட்சிகளை வைத்தே பல படங்கள் ஹிட்டும் ஆகி இருக்கிறது.
அந்த சமயம் எல்லாம் இதன் காரணமாகவே பல முன்னணி ஹீரோக்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தங்களுடைய படங்களில் கவுண்டமணி வேண்டும் என்று அடம் பிடித்து இருக்கிறார்கள். அப்படி தான் ரஜினிகாந்தும் கூட கவுண்டமணிக்காக ஒரு முறை காத்திருந்து அவருடைய கால்ஷீட் கிடைத்தால் போதும் என்று நினைத்தாராம். ஒரு முறை பாபா படத்தின் படப்பிடிப்பின் போது கவுண்டமணியின் கால்ஷீட் கிடைக்கவில்லையாம்.
கவுண்டமணி அந்த சமயம் வேறு பல படங்களில் நடித்து கொண்டு இருந்தாராம். கவுண்டமணிக்கு அப்போது 3 மணி நேரம் மட்டும் கால்ஷீட் இருந்ததாம். உடனடியாக இந்த தகவல் ரஜினிகாந்திற்கு தெரியவர அன்று வேறுறொரு காட்சி பாபா படத்தில் எடுக்கப்பட்டு வந்ததாம். கவுண்டமணி கால்ஷீட் கிடைத்ததும் ரஜினிகாந்த் அந்த காட்சியை அப்டியே நிறுத்திவைத்துவிட்டு கவுண்டமணியை அழைத்து அவர் சம்மந்தப்பட்ட காட்சியை எடுக்க கூறினாராம்.
இப்போது தான் கவுண்டமணி கால்ஷீட் கிடைத்து இருக்கிறது இதற்கு மேல் விட்டால் கால்ஷீட் கிடைக்காது என அந்த 3 மணி நேரத்தில் பாபா படத்திற்கு தேவையான கவுண்டமணி காட்சிகளை எடுக்க ரஜினிகாந்த் கூறினாராம். அதுவும் ரஜினிகாந்த் பீக்கில் இருந்த சமயத்திலேயே கவுண்டமணியின் கால்ஷீட்காக காத்திருந்தாராம். இந்த தகவலை மருத்துவரும் சினிமா ஆய்வாளருமான கந்தராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…