pradeep ranganathan [file image]
Pradeep Ranganathan : பிரதீப் ரங்கநாதன் அடுத்த படத்திற்கு சம்பளமாக 10 கோடி வாங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லவ் டுடே படத்தை இயக்கி நடித்ததன் மூலம் பிரபலமான பிரதீப் ரங்கநாதன் மார்க்கெட் எங்கயோ சென்றுவிட்டது என்றே சொல்லலாம். இந்த வெற்றியை தொடர்ந்து அவர் படத்தை இயக்கி நடிப்பார் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அவர் அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘LIC’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
ஏற்கனவே, லவ்டுடே படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது சம்பளத்தை பிரதீப் ரங்கநாதன் தனது சம்பளத்தை கோடி கணக்கில் உயர்த்தியதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அந்த தகவலை தொடர்ந்து அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன் தெலுங்கில் படம் ஒன்றை இயக்க கோடி கணக்கில் சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தெலுங்கில் பெரிய தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தான். இந்த நிறுவனம் அடுத்ததாக தமிழில் அஜித்குமாரை வைத்து ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறது. அந்த படத்தை தொடர்ந்து தெலுங்கில் அடுத்ததாக ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறதாம். அந்த படத்தை தான் பிரதீப் ரங்கநாதன் இயக்கவுள்ளாராம்.
அந்த படத்தை இயக்க பிரதீப் ரங்கநாதன் சம்பளமாக ஒரு தொகை கேட்டாராம். ஆனால், தயாரிப்பு நிறுவனம் அவருக்கு 10 கோடி வரை சம்பளம் கொடுக்க ரெடியாக இருப்பதாக கூறியுள்ளதாம். படத்திற்கான பேச்சுவார்த்தைகள் எல்லாம் முடிந்து அவர் சம்பளமும் வாங்கிவிட்டாராம்.விரைவில் இந்த திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின்…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில், திருமணமாகி வெறும் மூன்று…
ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பராபரையும்…
சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை…
ஸ்ரீநகர் : நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில்…
லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…