விஜய் மகன் சஞ்சய் செய்த செயலால் கடுப்பான லைக்கா! படம் ஆரம்பிக்கும் போதே இப்படியா?

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயின் மகன் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். அவர் இயக்குனராக அறிமுகம் ஆகும் அந்த திரைப்படத்தினை பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. ஆனால், சஞ்சய் இயக்கும் அந்த திரைப்படத்தில் ஹீரோவாக எந்த நடிகர் நடிக்க போகிறார் எந்தெந்த பிரபலங்கள் நடிக்கிறார்கள் என எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இதற்கிடையில், இந்த திரைப்படத்திற்கான பூஜை கடந்த சில நாட்களுக்கு முன்பு சைலண்டாக போடப்பட்டதாகவும் தகவல்கள் கசிந்தது. ஆனால், இன்னும் படத்தில் நடிக்கும் நடிகர்கள் யார் படத்தின் படப்பிடிப்பு இப்போது தொடங்குகிறது என்ற அறிவிப்பு தான் வெளியாகவே இல்லை. இதனால் ரசிகர்கள் பலரும் சோகத்தில் இருக்கிறார்கள்.
இதற்கிடையில், லைக்கா நிறுவனம் சஞ்சய் மீது சற்று கடுப்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதற்கு காரணம் என்னவென்றால், சஞ்சய் படத்திற்கான முழு கதையை எழுதி செப்டம்பர் மாதமே கொடுப்பதாக லைக்கா நிறுவனத்திடம் கூறியிருந்தாராம். அதன்பிறகு வேலைகள் முடியாத காரணத்தால் டிசம்பர் மாதம் கொடுக்கிறேன் என்று கூறிவிட்டாராம்.
சத்தமே இல்லாமல் நடந்து முடிந்த சஞ்சய் பட பூஜை! மகனுக்காக கலந்துகொள்ளாத விஜய்?
அதற்கு காரணமே கதை அனைத்தையும் சஞ்சய் ஆங்கிலத்தில் தான் எழுதி இருக்கிறாராம். எனவே, தற்போது பக்கத்தில் இருந்து மற்றோருவர் அதனை தமிழில் மொழிமாற்றம் செய்து எழுதி வருகிறாராம். இதனால் தற்போது லைக்கா நிறுவனம் சஞ்சய் மீது கடுமையான அப்செட்டில் இருக்கிறதாம்.
இந்த தகவலை வலைப்பேச்சு தெரிவித்துள்ளது. மேலும், ஜேசன் சஞ்சய் இயக்கும் இந்த திரைப்படத்தில் கவின் ஹீரோவாக நடிப்பதாகவும், இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாகவும் லேட்டஸ்ட் ஆன ஒரு தகவல் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
மத கஜ ராஜா வசூலை மொத்தமாக எரித்த டிராகன்! 5 நாட்களில் இவ்வளவு வசூலா?
February 26, 2025
AFG vs ENG: இந்த டார்கெட்டை அடிச்சு காமிங்க! சதம் விளாசி இங்கிலாந்துக்கு பெரிய இலக்கு வைத்த இப்ராஹிம்!
February 26, 2025
முதல்ல அரசியல் நாகரிகத்தை கத்துக்கோங்க! விஜய்க்கு CPI மாநில செயலாளர் முத்தரசன் அட்வைஸ்!
February 26, 2025
இப்படியா விளையாடுவீங்க? பாகிஸ்தானை விளாசி தள்ளிய ஷோயிப் அக்தர்!
February 26, 2025