கல்லா கட்ட படக்குழு போட்ட மாஸ்டர் பிளான்! இந்தியன் 2 ரிலீஸ் குறித்த அப்டேட்!
கோலிவுட் சினிமாவில் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படங்களில் இந்தியன் 2வும் ஒன்று. ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே. சூர்யா, சித்தார்த், தீபா சங்கர், மார்க் பென்னிங்டன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்க்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு எல்லாம் முடிந்து இறுதி கட்ட வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாகவே படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் முடிவு செய்யப்படாமல் அறிவிக்கப்படாமல் இருக்கிறது.
Read More- ரொம்ப கஷ்டமான விஷயம்! அதிர்ச்சியுடன் ‘GOAT’ படப்பிடிப்பில் இருந்து வீடியோ வெளியிட்ட வெங்கட் பிரபு!
இருப்பினும் படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அவர்களுக்காகவே தற்போது இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி இந்தியன் 2 திரைப்படம் வருகின்ற மே மாதம் வெளியிட திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மே மாதம் விடுமுறை நாட்கள் என்பதால் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம். விரைவில் படத்திற்கான ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 1996 ஆம் ஆண்டு இந்தியன் படத்தின் முதல் பாகம் வெளியாகிவிட்டது. முதல் பாகம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்ப்பை பெற்று மிகப்பெரிய வெற்றியை பெற்றது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தியன் 2 27 வருட இடைவெளிக்குப் தயாராகி வருகிறது. இந்த படத்தின் மூலம் ஷங்கரும் கமல்ஹாசனும் கூட்டணியில் இணைந்துள்ளனர்.