Simran : கமல்ஹாசன் தன்னுடைய படம் ஒன்றில் சிம்ரனை நடிக்க வைக்கவேண்டாம் என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஒரு காலத்தில் சிம்ரன் எந்த அளவிற்கு முன்னணி நடிகையாக இருந்தார் என்பதை பற்றி சொல்லியே தெரிய வேண்டாம். அந்த அளவிற்கு அவர் 90ஸ் காலகட்டத்தில் தொடர்ச்சியாக பல பெரிய நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து விட்டாலும் கூட அவருக்கு பெரிய அளவில் சமீபகாலமாக பட வாய்ப்புகள் வருவதில்லை.
இருப்பினும் ஆரம்ப காலத்தில் எல்லாம் பல பெரிய நடிகர்கள் தங்களுடைய படங்களில் தங்களுக்கு ஜோடியாக சிம்ரனை நடிக்க வைக்கவே முயற்சியும் செய்து இருக்கிறார்கள். இப்படியான ஒரு சூழலில் சிம்ரன் பீக்கில் இருந்த நேரத்தில் இயக்குனர் சொல்லியும் கூட நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய படத்தில் சிம்ரன் நடிக்கவே வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.
அது என்ன திரைப்படம் என்றால் இயக்குனர் மௌலி இயக்கத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளிவந்த ‘பம்மல் கே சம்பந்தம்’ திரைப்படம் தான். இந்த திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக சிம்ரன் தான் நடித்திருந்தார். ரமேஷ் கண்ணா, அப்பாஸ், சினேகா பிரசன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் தேவா இசையமைத்து இருந்தார்.
இந்த திரைப்படத்தின் கதை எல்லாம் பேசி முடித்த பிறகு படத்தில் ஹீரோயினாக யாரை நடிக்க வைக்கலாம் என்ற பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருந்த சமயத்தில் இயக்குனர் மௌலி படத்தில் சிம்ரனை நடிக்க வைக்கலாம் என்று கூறினாராம். அதற்கு கமல்ஹாசன் இல்லை இல்லை சிம்ரன் வேண்டாம் நல்ல தமிழ் தெரிந்த யாரையாவது நடிக்க வைக்கலாம் என்று கூறினாராம்.
அதற்கு இயக்குனர் மௌலி இல்லை நான் சிம்ரனுடன் நடித்திருக்கிறேன் அவர் இந்த படத்திற்கு சரியாக இருப்பார் என்று கூறினாராம். ஆனால், இயக்குனர் இப்படி பல விஷயங்களையும் கூறியுமே கமல்ஹாசன் வேண்டவே வேண்டாம் என்று அடம் பிடித்தாராம். பிறகு தான் இயக்குனர் இவ்வளவு சொல்கிறார் என்று சிம்ரனை நடிக்க வைக்க ஒப்புக்கொண்டாராம். பிறகு படத்தில் அவர்களுடைய காம்பினேஷன் நன்றாக இருந்ததால் அடுத்ததாக தொடர்ச்சியா இணைந்து படங்களிலும் நடித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…