ஆள விடுங்கப்பா சாமி! கமல்ஹாசன் படத்தில் இருந்து விலகிய துல்கர் சல்மான்?
Dulquer Salmaan நடிகர் துல்கர் சல்மானுக்கு தமிழிலும் சரி மற்ற மொழிகளிலும் சரி பட வாய்ப்புகள் குவிந்து கொண்டு இருக்கிறது என்றே கூறலாம். குறிப்பாக அவர் தமிழில் சுதாகொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள அவருடைய 43-வது திரைப்படம் மற்றும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைப் ஆகிய படங்களில் நடிக்கவும் துல்கர் சல்மான் கமிட் ஆகி இருந்தார்.
read more- சாய் பல்லவி பெயரில் பண மோசடி? வழக்கு தொடர்ந்ததா ‘RBI’? உண்மை இதோ!!
இந்த நிலையில், தக் லைப் திரைப்படத்தில் தான் நடிக்கவில்லை என்று துல்கர் சல்மான் விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, அவரும் இந்த திரைபடத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு இந்த படத்திற்கான படப்பிடிப்பும் தொடங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
READ MORE – அண்ணன் – தம்பிக்கு ஜோடியாக நடிக்கும் அதிதி ஷங்கர்! உங்க காட்டுல மழை தான்!
இதனையடுத்து, பல படங்களில் நடிக்க கமிட் ஆகி இருப்பதன் காரணமாக எல்லா படத்திற்கு சரியான தேதியை ஒதுக்க முடியவில்லை என்ற காரணத்தால் தக் லைஃப் படத்தில் இருந்து நடிகர் துல்கர் சல்மான் விலகி உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இருப்பினும் அவர் விலகியது பற்றி எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
read more- சூரிக்கு பாராட்டு மழை தான்…பெர்லினில் கவனம் ஈர்த்த ‘கொட்டுக்காளி’ திரைப்படம்.!
கமல் படத்தில் நடிப்பது என்பது ஒரு பெரிய வாய்ப்பு எனவே, இந்த மாதிரி ஒரு பெரிய படத்தில் இருந்து விலகியுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மேலும், நடிகர் துல்கர் சல்மான் தற்போது லக்கி பாஸ்கர் என்ற தெலுங்கு திரைப்படத்திலும் நடிக்க கமிட் ஆகி நடித்து கொண்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.