இயக்குனர் அட்லீ கடைசியாக பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது என்றே சொல்லலாம். வசூல் ரீதியாக இந்த திரைப்படம் 1,100 கோடி வசூல் செய்திருந்தது. ஷாருக்கானுக்கும் அட்லீக்கும் இந்த படம் பெரிய வெற்றிப்படமாகவும் அமைந்தது.
இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் அட்லீ யாரை வைத்து படம் இயக்கப்போகிறார் என்ற எதிர்ப்ப்பு எழுந்திருக்கும் நிலையில், அவருடைய அடுத்த படம் குறித்து ஒரு சுவாரசியமான செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆயிரம் கோடி வசூல் செய்த ஜவான்! தமிழ் சினிமாவில் புதிய சாதனை படைத்த அட்லீ!
அது என்னவென்றால், இயக்குனர் அட்லீ விஜய், ஷாருக்கான் ஆகியோரை வைத்து பிரமாண்டமாக ஒரு படம் எடுக்கவுள்ளாராம். ஜவான் படத்தில் ஷாருக்கானுடன் விஜய் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் என்று முன்னதாக தகவல்கள் பரவி வந்தது. ஆனால், படம் வெளியான பிறகு விஜய் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ள என்பது தெரியவந்தது.
ஆனால் ஜவான் படத்தின் போது விஜய்யுடன் நடிக்க தயாராக இருப்பதாக ஷாருக்கான் தெரிவித்தார். அதேபோல் விஜய்யும் ஷாருக்கானுடன் நடிக்க தயார் என்று சில பேட்டிகளிலும் கூறியுள்ளார். இதனையடுத்து, சமீபத்தில், பிரபல ஹாலிவுட் பட தயாரிப்பு நிறுவனம் ஒன்று அட்லீயிடம் ஒரு படத்தை இயக்குகங்கள் என்று கூறி முன் வந்ததாக கூறப்படுகிறது.
இந்தப் படத்துக்கான கதையை தயார் செய்து வருகிறேன் எனவும் இயக்குனர் அட்லீயே பேட்டி ஒன்றில் தெரிவித்தும் இருந்தார். எனவே, ஷாருக்கான் மற்றும் விஜய் இணைந்து நடிக்கும் படத்திற்கான கதையை தான் அட்லீ எழுதி வருவதாகவும், எழுதி முடித்த பிறகு படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
ஏற்கனவே, சமீபகாலமா ஷாருக்கான் நடிக்கும் படங்கள் எல்லாம் 1000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது. அதைப்போல மற்றோரு பக்கம் விஜய் நடிக்கும் படங்கள் எல்லாம் 600 கோடிகளுக்கு மேல் வசூலை குவித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், இருவரும் இணைந்து படம் நடித்தால் கண்டிப்பாக அந்த படம் 2000 கோடி வசூல் செய்யும் என்பதில் எந்த சந்தகேமும் இல்லை.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…