வணங்கான் ஹிட் ஆகும்..சம்பளம் இனிமே இத்தனை கோடி! அருண் விஜய் கண்டிஷன்?

Published by
பால முருகன்

சினிமா துறையில் இருக்கும் நடிகர்கள் தாங்கள் நடிக்கும் படங்கள் வெற்றியடைந்தது என்றால் அவர்கள் தங்களுடைய அடுத்த படத்தில் சம்பளத்தை உயர்த்தி கேட்கும் தகவலை பார்த்து இருப்போம். அப்படி தான் நடிகர் அருண் விஜய்யும் தனது சம்பளத்தினை வணங்கான் படத்தினை தொடர்ந்து அடுத்ததாக நடிக்கவுள்ள படத்தில் உயர்த்தி கேட்டு வருகிறாராம்.

அருண் விஜய் தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகி இருக்கும் வணங்கான் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். படத்தினை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் டிரைலர் எல்லாம் ஏற்கனவே வெளியாக்க படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகபடித்தி இருக்கும் நிலையில், படம் வரும் ஜூலை மாதம் ரிலீஸ் ஆகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கண்டிப்பாக படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பை வைத்து பார்க்கையில், படம் அருண் விஜய்க்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், அவர் படம் வெற்றியடையும் நம்பிக்கையில் தனது சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக கூறப்படுகிறது. வணங்கான் படத்தில் நடித்ததற்காக அருண் விஜய் சம்பளமாக 5 கோடி வாங்கி இருந்தாராம்.

வணங்கான் படம் ஹிட் ஆனது என்றால், கண்டிப்பாக நமக்கு மார்க்கெட் இன்னுமே உயரும் என நம்பிக்கை வைத்து அடுத்ததாக நடிக்கும் படங்களுக்கு 8 கோடி சம்பளம் வாங்க முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அடுத்ததாக தன்னை வைத்து படம் தயாரிக்க தேடி வரும் தயாரிப்பாளர்களிடமே தனக்கு சம்பளம் மட்டும் 8 கோடி வேண்டும்  என்று கண்டிஷன் போடுவதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் கிசு கிசுக்கப்படுகிறது. மேலும், அருண் விஜய் வணங்கான் படத்தினை தொடர்ந்து ரெட்டை தல என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கா? வானிலை மையம் கொடுத்த தகவல்!

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கா? வானிலை மையம் கொடுத்த தகவல்!

சென்னை : கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு…

24 minutes ago

தமிழகத்தில் வியாழன் கிழமை (05/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : சரவணம்பட்டி, அம்மன்கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமண்டம்பாளையம், ஜி.என்.மில், சுப்பிரமணியம்பாளையம், கே.என்.ஜி.புதூர், மணியகாரம்பாளையம், லட்சுமிநகர், நாச்சிமுத்துநகர்,…

39 minutes ago

“புயலுக்கு இதுதான் தீர்வா? சுயநல ஆட்சியாளர்கள்..” அறிக்கையில் சீறிய விஜய்!

சென்னை : ஃபெஞ்சல் புயல் பாதிப்புகள் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள தவெக தலைவர் விஜய், ஆளும்…

48 minutes ago

சிறகடிக்க ஆசை சீரியல் – மீனாவிடம் உண்மையை உளறும் பார்வதி ..!

சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [டிசம்பர் 4]எபிசோடில் மனோஜை பார்த்து கேலி செய்யும் குடும்பம்..  நீத்துவால் ரவி ஸ்ருதிக்கு…

1 hour ago

“உடனே விடுவிக்க வேண்டும்”..ஹமாஸ்க்கு டிரம்ப் எச்சரிக்கை! நன்றி தெரிவித்த இஸ்ரேல் பிரதமர்!

வாஷிங்டன் : கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்தே இஸ்ரேல் -ஹமாஸ் போர் நடந்து வருவது இன்னும் முடிவுக்கு வராமல்…

2 hours ago

மகாராஷ்டிரா புதிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்!  ஏக்நாத் ஷிண்டேவுக்கு என்ன பொறுப்பு?

மும்பை : மகாராஷ்டிரா மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்கள் கடந்தும் அம்மாநில புதிய முதலமைச்சர் யார் என்ற…

2 hours ago