anushka shetty [file image]
நடிகை அனுஷ்காவுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்றே சொல்லலாம். இருந்தாலும் அவருக்கு ஆரம்ப காலத்தை போல பெரிய அளவில் தற்போது பட வாய்ப்புகள் வரவில்லை என்றே கூறலாம். அதற்க்கு முக்கியமான காரணம் என்னவென்றால், அவர் தன்னுடைய உடல் எடையை அதிகரிக்க செய்தது தான்.
இஞ்சு இடுப்பழகி படத்தில் நடிப்பதற்காக அவர் தனது உடல் எடையை அதிகரிக்க செய்து இருந்தார். அதன் பிறகு உடல் எடையை குறைக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறார். இன்னும் தனது உடல் எடையை குறைத்தபாடு இல்லை. இன்னும் சற்று உடல் எடையை அதிகரித்தது போல தான் இருக்கிறார்.
ஒரு காலத்தில் ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோருக்கு ஜோடியாக நடித்து வந்த இவர் தற்போது பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் சிறிய சிறிய நடிகர்களுக்கு ஜோடியாக சிறிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் , கடைசியாக மிஸ் ஷெட்டி மிஸ்டர் போலிஷெட்டி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
மீண்டும் பழைய பார்முலாவை கையில் எடுக்கும் நயன்தாரா?
அந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் ஆனது. அந்த திரைப்படத்தினை தொடர்ந்து அடுத்ததாக அனுஷ்கா Kathanar – The Wild Sorcerer என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் மலையாளத்தில் உருவாகவுள்ளது.
இந்த திரைப்படத்தினை தொடர்ந்து நடிகை அனுஷ்கா பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் ஒரு திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறாராம். பட வாய்ப்புகள் சரியாக வரவில்லை என்ற காரணத்தால் அவர் தற்போது பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படவுள்ள படத்தில் நடிக்க முடிவு எடுத்து இருக்கிறாராம்.
மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…